LATEST NEWS
“உயிரே போனாலும் பின்வாங்க மாட்டேன்.!” பண்ணை வீட்டிற்குள் பாய்ந்த ரத்தவெறி சிறுத்தை… தாடையைப் பிடித்து தொங்கிய வீரம் நிறைந்த வளர்ப்பு நாய் ‘ராக்கி’… பதற வைக்கும் அதிர்ச்சி CCTV காட்சிகள்..!!
மஹாராஷ்டிரா மாநிலம் தாணே மாவட்டம் முர்பாட் தாலுகாவில் உள்ள சாக்ரே கிராமத்தில் அமைந்துள்ள ஒரு பண்ணை வீட்டில் சிறுத்தை ஒன்று புகுந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மகாராஷ்டிரா நவ்நிர்மாண் சேனா கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ ராஜு பாட்டீலின் சகோதரர் விஜய் பாட்டீலுக்குச் சொந்தமான இந்த பண்ணை வீட்டிற்குள், திங்கள்கிழமை மாலை சுமார் 7 மணியளவில் சிறுத்தை திடீரென நுழைந்தது. அங்கு நின்று கொண்டிருந்த ‘ராக்கி’ என்ற வளர்ப்பு நாயைப் பார்த்த சிறுத்தை, சற்றும் தாமதிக்காமல் அதன் மீது பாய்ந்து தாக்கியது.
சிறுத்தையின் திடீர் தாக்குதலால் சற்றும் அஞ்சாத ராக்கி, தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முழு பலத்துடன் சிறுத்தையை எதிர்த்துப் போராடியது. சண்டையின் போது ராக்கி சிறுத்தையின் தாடையைக் கவ்விப் பிடித்ததாகக் கூறப்படுகிறது. அதன் பிறகு இரண்டுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. சிறுத்தை தனது கூர்மையான நகங்களால் ராக்கியைத் தாக்க முயன்றபோதிலும், ராக்கி அதை விட்டுக்கொடுக்கவில்லை. இறுதியில் சிறுத்தையின் தொடர் தாக்குதல்களுக்குப் பிறகே ராக்கி அதன் தாடையை விடுவித்தது. சுமார் 5 முதல் 7 நிமிடங்கள் வரை நீடித்த இந்த ஆபத்தான சண்டைக்குப் பிறகு, சிறுத்தை பின்வாங்கி பண்ணை வீட்டின் வளாகத்தை விட்டு வெளியேறியது. இந்த முழு சம்பவமும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, அப்பகுதியில் சிறுத்தையின் நடமாட்டம் குறித்து கிராம மக்களிடையே அச்சமும் கவலையும் அதிகரித்துள்ளது. மாலை மற்றும் இரவு நேரங்களில் குடியிருப்புப் பகுதிகள் மற்றும் பண்ணை வீடுகளின் அருகே காட்டு விலங்குகளின் நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், இரவில் தனியாக வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேவேளையில், சிறுத்தையை எதிர்த்துப் போராடி உயிர் தப்பிய ராக்கி நாயின் வீரியத்தையும் தைரியத்தையும் அப்பகுதி மக்களும் சமூக வலைதளப் பயனர்களும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
