LATEST NEWS
திக் திக் திக்.. சத்தம் கேட்டு வெளியே வந்த நபர்.. தலைக்கு மேல் பாயுந்த சிறுத்தை.. மரணத்தின் விளிம்பில் உறைந்துபோன கொடூரம்.. நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ..!!
இமாச்சலப் பிரதேசத்தில் தனது வீட்டிற்கு வெளியே கேட்ட விசித்திரமான சத்தத்தைக் கேட்டு, அது என்னவென்று பார்ப்பதற்காக நபர் ஒருவர் அசட்டையாக வெளியே வந்துள்ளார். தனக்கு மிக அருகிலேயே ஒரு சிறுத்தை பதுங்கியிருப்பதை அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவர் வெளியே வந்த அடுத்த நொடி, அந்தச் சிறுத்தையானது மின்னல் வேகத்தில் அவர் கண் முன்னால் திடீரெனப் பாய்ந்து வந்து நின்றதைக் கண்டு அவர் ஒட்டுமொத்தமாக உறைந்து போனார். ஆனால், அதிர்ஷ்டவசமாக அந்தச் சிறுத்தை அவரைத் தாக்காமல் அங்கிருந்து அமைதியாகக் கடந்து சென்றதால், அவர் நூலிழையில் உயிர் தப்பினார்.
சமீபகாலமாக இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட இமயமலை மாநிலங்களில் மனிதர்களுக்கும் சிறுத்தைகளுக்கும் இடையிலான மோதல்கள் நூறு மடங்கு அதிகரித்துள்ளதாக புள்ளிவிவரங்கள் எச்சரிக்கின்றன. காடுகள் அழிக்கப்படுவதாலும், உணவு மற்றும் இருப்பிடத் தேடலாலும் வனவிலங்குகள் மனிதர்கள் வாழும் குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைவது தொடர்கதையாகி வருகிறது. நெஞ்சை உலுக்கும் இந்தச் சிறுத்தை வேட்டைச் சம்பவத்தின் நேரடி வீடியோ தற்பொழுது சமூக ஊடகங்களில் வெளியாகி இணையவாசிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
