அய்யோ என்னாச்சு..? சட்டப்பேரவையில் திடீரென சுருண்டு விழுந்த அதிகாரி… ஓடோடி வந்து CPR முதலுதவி கொடுத்த அமைச்சர்..! நொடிப் பொழுதில் சட்டமன்ற வளாகத்தில் நடந்த பதறவைக்கும் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அய்யோ என்னாச்சு..? சட்டப்பேரவையில் திடீரென சுருண்டு விழுந்த அதிகாரி… ஓடோடி வந்து CPR முதலுதவி கொடுத்த அமைச்சர்..! நொடிப் பொழுதில் சட்டமன்ற வளாகத்தில் நடந்த பதறவைக்கும் சம்பவம்..!!

Published

on

தெலங்கானா மாநில சட்டப்பேரவையின் காரிடாரில் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி நவீன் மிட்டலின் தனிச்செயலாளராகப் பணியாற்றி வந்த கிருஷ்ண மோகன் ராஜு என்பவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார். ஆற்றல் துறையில் பிரிவு அதிகாரியாக இருந்த இவர், சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடந்துகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக மயக்கமடைந்தார்.

அதிகாரி கீழே விழுவதைக் கண்ட தெலங்கானா மாநில கால்நடை பராமரிப்பு மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் வாகிதி ஸ்ரீஹரி, உடனடியாகச் செயல்பட்டு அவருக்கு முதலுதவியாக சி.பி.ஆர் அளித்தார். சட்டப்பேரவையில் பணியிலிருந்த மருத்துவர் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பாகவே, அமைச்சர் உடனடியாக அவருக்கு முதலுதவி அளித்து உயிரைக் காப்பாற்ற முயன்றார்.

Advertisement

அமைச்சரின் முயற்சிக்குப் பிறகு, அங்கு வந்த மருத்துவக் குழுவினர் அவரை உடனடியாக சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இருப்பினும், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் நிலையில், தெலங்கானா தலைமைச் செயலகச் சங்கம் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in