CRIME
“அவ என் பொண்டாட்டிடா” அண்ணியுடன் தம்பிக்கு தகாத உறவு… அண்ணனையே குத்தி கொலை செய்த கொடூரம்… கிருஷ்ணகிரியை உலுக்கிய கொடூரம்..!!
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள ஜார்க்கலட்டி கிராமத்தில், அண்ணனின் மனைவியுடன் ஏற்பட்ட தகாத உறவு காரணமாக, அண்ணனையே தம்பி கத்தியால் குத்தி கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பிண்டு (35) என்பவர், தனது மனைவி, நான்கு குழந்தைகள் மற்றும் தம்பி ராஜேஷ் ஆகியோருடன் இந்த கிராமத்தில் தங்கி கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில், பிண்டுவின் மனைவிக்கும் ராஜேஷுக்கும் இடையே தகாத உறவு இருப்பது அண்ணனுக்குத் தெரியவந்துள்ளது.
சம்பவத்தன்று இரவு இருவரும் மது அருந்திக் கொண்டிருந்தபோது, தனது மனைவியுடனான கள்ளத்தொடர்பை உடனடியாகக் கைவிடுமாறு ராஜேஷிடம் பிண்டு கடுமையாக வலியுறுத்தியுள்ளார். இதனால் இருவருக்குள்ளும் வாக்குவாதம் முற்றி பெரும் தகராறாக மாறிய நிலையில், ஆத்திரமடைந்த ராஜேஷ் கத்தியை எடுத்து அண்ணன் பிண்டுவை கொடூரமாகக் குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த பிண்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இக்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள தேன்கனிக்கோட்டை போலீசார் தப்பியோட முயன்ற தம்பி ராஜேஷைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
