LATEST NEWS
கூட்டணியில் வெடித்த மோதல்.. ஆதரவை விலக்கத் தயாராகும் காங்கிரஸ்.. செல்வப்பெருந்தகை எடுத்த திடீர் முடிவால் CM விஜய்க்கு அதிர்ச்சி..!!
தமிழக வெற்றிக் கழகத்தினர் முதலமைச்சர் விஜய்யை அடுத்த பிரதம எனப் பேசி வருவது காங்கிரஸ் கட்சியினரிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தவெக தலைமையிலான அரசிற்கு அளித்து வரும் ஆதரவைத் திரும்பப் பெற விரும்புவதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் செல்வப்பெருந்தகை அதிரடியாகத் தெரிவித்துள்ளார். ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக ஏற்காவிடில் அமைச்சரவையில் இருந்து விலகுவோம் என அமைச்சர் ராஜேஷ்குமார் எச்சரித்திருந்த நிலையில், இந்த விவகாரம் தற்போதைய அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
இதுகுறித்துத் விரிவாகப் பேசிய செல்வப்பெருந்தகை, தவெக கூட்டணியில் இருந்து வெளியேறி அமைச்சரவையில் இருந்து விலகுவோம் என்று ராஜேஷ்குமார் கூறியுள்ள கருத்தை வெறும் தனிப்பட்ட கருத்தாகப் பார்க்க முடியாது என்றும், அதனை ஒட்டுமொத்த காங்கிரஸ் பேரியக்கத்தின் குரலாகவே தான் பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், ராஜேஷ்குமார் முன்வைத்த எச்சரிக்கைக்கு தவெகவிற்கான ஆதரவை விலக்குகிறோம் என்பதுதான் உண்மையான அர்த்தம் என விளக்கிய அவர், தானும் அந்த முடிவையே முழுமையாக வழிமொழிவதாகத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
