“Help Me…” நடுக்காட்டில் இருந்து வந்த வாட்ஸ்அப் மெசேஜ்… கூல்டிரிங்ஸில் மதுபானம் கலந்து கொடூர பிளான்… 5 மணி நேரத்தில் அதிரடி காட்டிய போலீசார்..! கிருஷ்ணகிரியில் பரபரப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“Help Me…” நடுக்காட்டில் இருந்து வந்த வாட்ஸ்அப் மெசேஜ்… கூல்டிரிங்ஸில் மதுபானம் கலந்து கொடூர பிளான்… 5 மணி நேரத்தில் அதிரடி காட்டிய போலீசார்..! கிருஷ்ணகிரியில் பரபரப்பு..!!

Published

on

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், மங்கள்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவருக்கு 5 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.5 லட்சம் கடன் கொடுத்துள்ளார். நீண்ட நாட்களாகியும் பணத்தைத் திருப்பிக் கொடுக்காததால், 4 மாதங்களுக்கு முன்பு அவரை நேரில் வரவழைத்து, மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் வட்டியும், ஒரு வருடத்திற்குள் அசல் தொகையையும் செலுத்த வேண்டும் என பத்திரம் எழுதி வாங்கியுள்ளார். இந்த நிலையில், நிலுவையில் உள்ள வட்டிப் பணத்தைக் கேட்பதற்காக அந்தப் பெண் வெங்கடேஷைத் தொடர்பு கொண்டபோது, பணத்தைத் தருவதாகக் கூறி அவரை ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப்பகுதிக்கு வரவழைத்துள்ளார்.

அங்கு வெங்கடேஷுடன் அவரது உறவினரான இளங்கோவும் இருந்துள்ளார். இருவரும் சேர்ந்து திட்டம் போட்டு, அந்தப் பெண்ணுக்குக் கொடுத்த கூல்டிரிங்ஸில் மதுபானத்தைக் கலந்து கொடுத்துள்ளனர். அதை அறியாமல் குடித்த அப்பெண்ணிற்குச் சிறிது நேரத்தில் மயக்கம் வரத் தொடங்கியுள்ளது. மயக்கமடைந்த பிறகு அவரைப் பாலியல் வன்கொடுமை செய்து, ஆபாச வீடியோ எடுக்க இருவரும் திட்டமிட்டிருந்த நிலையில், மயக்கம் முற்றுவதற்கு முன்பாகவே நிலைமையை உணர்ந்து அந்தப் பெண் சுதாரித்துக் கொண்டார்.

Advertisement

நடுக்காட்டில் ஆபத்தான சூழலில் மாட்டிக் கொண்டதை உணர்ந்த அப்பெண், அங்கிருந்து உடனடியாகத் தப்பிக்க வழி தெரியாமல் தன் செல்போனைப் பயன்படுத்தி, வாட்ஸ்அப்பில் “Help Me” என மெசேஜ் டைப் செய்து, தான் இருக்கும் இடத்தின் நேரலை லொகேஷனை பெற்றோருக்கு அனுப்பியுள்ளார். தகவலறிந்த தனிப்படை போலீசார், வாட்ஸ்அப் லைவ் லொகேஷனைப் பின்பற்றி தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு சுமார் 5 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு அந்தப் பெண்ணைப் பத்திரமாக மீட்டனர். இதுதொடர்பாக வெங்கடேஷ் மற்றும் இளங்கோ ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in