CRIME
“அச்சச்சோ.. இ-ரிக்ஷா மீது பயங்கரமாக மோதிய நொறுக்கிய கருப்பு நிற கார்..” ஓட்டுநருக்கு நேர்ந்த கொடூரம்.. நெஞ்சை பதற வைக்கும் வைரல் வீடியோ..!!
உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத் பகுதியில், அமிதவேகமாக வந்த கருப்பு நிற சொகுசு கார் ஒன்று இ-ரிக்ஷா மீது பயங்கரமாக மோதிய விபத்தில், ரிக்ஷா ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த அதிவேக மோதலின் தாக்கத்தால் அந்த இ-ரிக்ஷா வாகனம் முற்றிலும் நொறுங்கி உருக்குலைந்தது. விபத்தில் படுகாயமடைந்த ரிக்ஷா ஓட்டுநரான நாசிம்என்பவரை, காரை ஓட்டி வந்த நபர் மீட்டு உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார்.
இருப்பினும், மருத்துவமனையில் நாசிமைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். நாசிம் இறந்துவிட்டதை அறிந்ததும், தார் காரை ஓட்டி வந்த நபர் சட்ட நடவடிக்கைகளுக்குப் பயந்து, அவரது உடலை மருத்துவமனையிலேயே போட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். விபத்தை ஏற்படுத்தியதோடு மட்டுமன்றி, சடலத்தைக் கைவிட்டு ஓடிய கார் ஓட்டுநரைத் தேடும் பணியில் உள்ளூர் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
