CRIME
“குருகுலப் பள்ளியில் பயங்கரம்..” அடுத்தடுத்து வாந்தி, வயிற்றுப்போக்கால் சுருண்டு விழுந்த மாணவ-மாணவிகள்.. திடுக்கிடும் பின்னணி..!!
ஆந்திரப் பிரதேச மாநிலம் ஒய்.எஸ்.ஆர் மாவட்டம் தொண்டூருவில் உள்ள டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் குருகுலப் பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு, உணவில் ஏற்பட்ட நச்சுத்தன்மை காரணமாகத் திடீர் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு, பள்ளியின் அதிகாரப்பூர்வ உணவுப் பட்டியலில் முட்டைக் குழம்பு இடம் பெறவில்லை. இருப்பினும், விடுதியின் பொறுப்பாளர்கள் மற்றும் சமையலர்கள் மாணவர்களுக்கு முட்டைக் குழம்பைச் சமைத்துப் பரிமாறியதாகக் கூறப்படுகிறது.
இந்த உணவைச் சாப்பிட்ட மாணவர்களில் பலருக்கு, மறுநாள் சனிக்கிழமை காலையிலிருந்து அடுத்தடுத்து கடுமையான வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு அறிகுறிகள் ஏற்படத் தொடங்கின. இதனால் மாணவர்கள் பெரும் அசதிக்குள்ளாகி அவதியுற்றனர். விடுதி நிர்வாகத்தினர் உடனடியாகத் தகவலளித்ததைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட அனைத்து மாணவர்களும் தொண்டூரு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்குள்ள மருத்துவக் குழுவினர் மாணவர்களுக்குத் தீவிரச் சிகிச்சை அளித்து, அவர்களின் உடல்நிலையைக் கண்காணித்து வருகின்றனர்.
