LifeStyle
“என் மனைவியை எதுவும் செய்யாதீங்க!”.. தற்கொலைக்கு முன் 21 வயது இளைஞர் பேசிய நெஞ்சை பிழியும் கடைசி வீடியோ.. கதற வைக்கும் சம்பவம்..!!
ஆக்ராவின் ரகாக்பஞ்ச் பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக 21 வயது இளைஞர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்கு முன்பாக அவர் தனது செல்போனில் செல்ஃபி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நான் வாழ விரும்பினேன், ஆனால் என்னால் இனி முடியவில்லை” என்று கண்ணீருடன் பேசியுள்ளார். மேலும், தனது குடும்பத்தினரிடம் மன்னிப்பு கோரிய அவர், தனது தற்கொலைக்கு மனைவி அல்லது அவரது வீட்டார் யாரையும் பொறுப்பாக்க வேண்டாம் என்றும், தனது மனைவியை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும் அந்த வீடியோவில் உருக்கமாகக் கேட்டுக் கொண்டுள்ளார்.
आगरा ब्रेकिंग: रकाबगंज क्षेत्र में 21 वर्षीय युवक ने फांसी लगाकर की आत्महत्या
आत्महत्या से पहले अपना सेल्फ वीडियो बनाया
गृह क्लेश से परेशान होकर आत्महत्या करने की आशंका
सूचना मिलते ही रकाबगंज थाना पुलिस मौके पर पहुंची
शव को कब्जे में लेकर पोस्टमार्टम के लिए भेजा गया
पुलिस… pic.twitter.com/zptjeJPuXC— Nitin Uppadhyay (@NitinUpadhyay2) July 21, 2026
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த ரகாக்பஞ்ச் காவல் நிலைய போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த மன உளைச்சல் ஏற்பட்டதாக சந்தேகிக்கப்படும் நிலையில், தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
