LifeStyle
வருஷத்துக்கு ஒரு முறையாவது குலதெய்வம் கோவிலுக்கு போயிட்டு வாங்கன்னு ஏன் சொல்றாங்க தெரியுமா? குலதெய்வ வழிபாட்டில் உள்ள மகிமைகள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
இஷ்ட தெய்வமாக பல தெய்வங்களை நாம் விரும்பிப் போய் வழிபட்டாலும் குலதெய்வம் வழிபாடு என்பது மிகவும் அவசியமானது. குலதெய்வம் கோவிலுக்கு செல்வது குடும்பத்தில் குடும்பத்திற்கு பல நன்மைகளை அளிக்கிறது. குடும்ப ஒற்றுமை மற்றும் தலைமுறைகளை தாண்டிய முன்னோர்களின் ஆசிர்வாதத்தை பெற்று தருகிறது.
ஆன்மீகம் மற்றும் குடும்ப நன்மைகள்
முன்னோர்களின் ஆசிர்வாதம்: குலதெய்வம் என்பது பொதுவாக நம்முடைய முன்னோர்களின் சக்தியாகவே கருதப்படுகிறது. அங்கு செல்வது முன்னோர்களின் சாபத்தை போக்கி முழுமையான ஆசீர்வாதத்தை பெற்றுத்தரும்.
வழிபாட்டின் அடிப்படை: குலதெய்வத்தின் அருள் இல்லாமல் வேறு எந்த தெய்வத்தின் அருளும் அருளும் முழுமையாக கிடைக்காது என்பது ஐதீகம்.
குடும்ப ஒற்றுமை: உறவினர்கள் அனைவரும் ஒரே இடத்தில் ஒன்று கூடுவதால் குடும்ப ஒற்றுமை மேலோங்கும்.
தடைகள் மற்றும் இன்னல்கள் நீங்குதல்
திருமண தடை: நீண்ட நாட்களாக திருமணமாகாதவர்களுக்கு தடை விலகி நல்ல வரன் அமையும்.
குழந்தை பாக்கியம்: குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குலதெய்வ அருள் நல்ல பலனைத் தரும்.
தொழில் மற்றும் கடன் பிரச்சினைகள்: வேலையில் உள்ள தடைகள் தொழிலில் நஷ்டம் மற்றும் சீராக கடன்கள் நீங்கி வளமான வாழ்க்கை அமையும்.
உளவியல் மற்றும் மன அமைதி
மன அழுத்தம் குறைவு: கோவிலின் தூய்மையான சூழல் மணியோசை மற்றும் வாசனை திரவியங்கள் மன அமைதியை தரும்.
பாதுகாப்பு உணர்வு: நம் குலத்தை காக்கும் தெய்வம் என்ற நம்பிக்கை வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பயத்தை போக்கி தன்னம்பிக்கையை தரும்.
எனவே வருஷத்துக்கு இருமுறை அல்லது ஒருமுறையாவது குலதெய்வம் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வது மனதுக்கு நிம்மதி அமைதியைத் தரும். குடும்பத்தில் மகிழ்ச்சியை உருவாக்கும்.
