இரவு நேரங்களில் நிம்மதியாக தூங்க இந்த விதமான எளிய உணவுகளை சாப்பிடுங்க – அஜீரண பிரச்னைகளும் இருக்காது, ஆழ்ந்த தூக்கத்துக்கும் உதவும் – என்னென்ன உணவுகள் பார்க்கலாமா? – cinefeeds
Connect with us

LifeStyle

இரவு நேரங்களில் நிம்மதியாக தூங்க இந்த விதமான எளிய உணவுகளை சாப்பிடுங்க – அஜீரண பிரச்னைகளும் இருக்காது, ஆழ்ந்த தூக்கத்துக்கும் உதவும் – என்னென்ன உணவுகள் பார்க்கலாமா?

Published

on

Sleep

இரவு நேரங்களில் தூங்கப்போவதால் எளிதான உணவுகளை எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. ஏனெனில் தூங்கும் நேரத்தில் உடல் உழைப்பு இல்லை. உடல் முழு ஓய்வில் இருக்கப் போகிறது. அதனால் இரவு நேரங்களில் உடல் ஆரோக்கியத்திற்கும் சிறந்த உணவுகளை தேர்வு செய்வது அவசியம். செரிமானத்திற்கு எளிதாக நாச்சத்து மற்றும் புரதம் நிறைந்த உணவுகள் ஆரோக்கியமான இரவு உணவாகும். தூக்கத்தை தூண்டும் மற்றும் உடலுக்கு ஊட்டமளிக்கும் சில இரவு உணவுகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

இட்லி அல்லது இடியாப்பம் – நீராவியில் வேகவைக்கப்படும் இந்த உணவுகள் எளிதில் ஜீரணமாகும்.

Advertisement

சப்பாத்தி காய்கறி குருமா – கோதுமை நார்சத்து நிறைந்தது. அத்துடன் காய்கறிகள் சேர்ப்பது உடலுக்கு சத்து தரும்.

காய்கறி சூப் – பார்லி பருப்பு அல்லது காஃலிபிளவர் போன்ற காய்கறிகளை கொண்டு சூப் செய்து சாப்பிடலாம்.

Advertisement

ஓட்ஸ் கஞ்சி – மெக்னீசியம் மற்றும் நார்ச்சத்து நிறைந்தது.

சாலாட்டுகள்
கொண்டைக்கடலை அல்லது பீன்ஸ் சாலட் – வேகவைத்த கொண்டைக்கடலை அல்லது பீன்ஸ் உடன் காய்கறிகள் சேர்த்து சாப்பிடலாம்.

Advertisement

வேகவைத்த முட்டை – புரதச்சத்து நிறைந்த வேக வைத்த முட்டை இரவு நேரம் பசியை போக்க சிறந்த வழியாகும்.

கிரேக்க தயிர் – புரோட்டீன் மற்றும் கால்சியம் நிறைந்தது இது நல்ல தூக்கத்திற்கு உதவும்.

Advertisement

பழங்கள் – செர்ரி கிவி மற்றும் வாழைப்பழம் போன்ற பழங்கள் தூக்கத்தை மேம்படுத்தும் ஹார்மோன்களை கொண்டுள்ளன.

பாதாம் பிஸ்தா – மெக்னீசியம் மற்றும் மெலடோனின் நிறைந்த நட்ஸ் வகைகள் ஆழ்ந்த தூக்கத்திற்கு உதவும்.

Advertisement

இதுபோன்ற எளிய உணவுகள் நல்ல தூக்கத்துக்கு வழிவகுக்கும். இரவு நேரங்களில் அதிகளவில் பாஸ்ட் புட் உணவுகள் பிரியாணி அசைவ வகைகள் பரோட்டா போன்ற உணவுகளை தவிர்ப்பது நல்லது என்று உணவியல் வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in