LATEST NEWS
“ஐயோ..! மலச்சிக்கல் தாங்க முடியலையா..? உங்க சமையலறையில இருக்குற இந்த 5 விஷயத்த வச்சு சூப்பரா சரி பண்ணலாம்… இதைப்பற்றி தெரிந்தால் அப்புறம் டாக்டர் கிட்டவே போக மாட்டீங்க..!!”
தற்கால நவீன வாழ்க்கை முறை மாற்றங்களால் பலரும் சந்திக்கும் மிக முக்கியமான செரிமானப் பிரச்சனை மலச்சிக்கல் ஆகும். துரித உணவுகளின் நுகர்வு, போதிய அளவு தண்ணீர் குடிக்காமை, நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து பணியாற்றுவது, உடற்பயிற்சியின்மை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்கள் ஆகியவை இதற்கு முக்கிய காரணங்களாக அமைகின்றன. இதனால் மலம் கழிப்பதில் சிரமம், குடல் இயக்கக் குறைபாடு, வயிறு உப்புசம் மற்றும் வயிற்றில் அசௌகரியம் ஏற்படுகின்றன. லேசான அல்லது அவ்வப்போது தோன்றும் மலச்சிக்கலை சில இயற்கை பானங்கள் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் எளிதாகச் சரிசெய்ய முடியும்.
காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் அரை எலுமிச்சம்பழச் சாறு கலந்து குடிப்பதன் மூலம் செரிமானம் மேம்பட்டு, குடல் இயக்கம் எளிதாவதுடன் கல்லீரலில் உள்ள கழிவுகளும் வெளியேறுகின்றன. அதேபோல, சர்க்கரை சேர்க்காத தூய ஆப்பிள் சாற்றை பகலில் குடிக்கும்போது, அதில் உள்ள நார்ச்சத்து மற்றும் ‘சார்பிட்டால்’ மலத்தை மென்மையாக்கி இலகுவாக வெளியேற்ற உதவுகிறது. மேலும், இரவில் தூங்கும் முன் ஒரு குவளை வெந்நீரில் ஒரு தேக்கரண்டி வெல்லம் கலந்து குடிப்பதும் செரிமானத்தை தூண்டும் நீரிழிவு நோயாளிகள் வெல்லத்தைத் தவிர்க்க வேண்டும்.
ஆயுர்வேதத்தில் முக்கியத்துவம் வாய்ந்த திரிபலா பொடியை, இரண்டு தேக்கரண்டி அளவு எடுத்து ஒரு குவளை வெந்நீரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் செரிமானக் கோளாறுகளுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும். அதேபோல், சக்திவாய்ந்த இயற்கை மலமிளக்கியாகச் செயல்படும் விளக்கெண்ணெயை இரவில் இரண்டு தேக்கரண்டி எடுத்துக்கொள்வது குடல் இயக்கத்தைத் தூண்டி மலச்சிக்கலை போக்க உதவும். சிறு குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் விளக்கெண்ணெயைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
