“தட்டி கேட்க யாருமில்லனு கொழுப்பா..?” சோசியல் மீடியா இன்ஃப்ளூயன்சர்களை வெளுத்து வாங்கிய ராதிகா.. அரசுக்கு வைத்த அதிரடி கோரிக்கை..!! – cinefeeds
Connect with us

CINEMA

“தட்டி கேட்க யாருமில்லனு கொழுப்பா..?” சோசியல் மீடியா இன்ஃப்ளூயன்சர்களை வெளுத்து வாங்கிய ராதிகா.. அரசுக்கு வைத்த அதிரடி கோரிக்கை..!!

Published

on

டிஜிட்டல் ஊடகங்களின் அசுர வளர்ச்சிக்குக் பின்பு, சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்துபவர்கள் மற்றும் திரைப்பட விமர்சனம் செய்பவர்கள், பிறரது தனிப்பட்ட வாழ்க்கையை மிக மோசமாக விவாதிப்பது எளிதாகிவிட்டதாக நடிகை ராதிகா சரத் குமார் கவலை தெரிவித்துள்ளார். தங்களைத் தட்டிக்கேட்க யாரும் இல்லை என்ற அதீத தைரியத்தில், திரைப்படங்கள், தனிமனிதர்கள், குறிப்பாகப் பெண்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் குறித்து அவதூறாகவும் தரக்குறைவாகவும் பேசி வருவதாக அவர் தனது பேட்டியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இத்தகைய அத்துமீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால், இந்தத் தவறுகளில் ஈடுபடும் குறைந்தது 3 பேர் மீது அரசு கடுமையான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ராதிகா வலியுறுத்தியுள்ளார். அவ்வாறு கடுமையான முன்மாதிரி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் மட்டுமே, டிஜிட்டல் தளங்களில் மற்றவர்களைப் பற்றி அவதூறு பரப்புபவர்களுக்கு அச்சம் ஏற்படும் என்றும், இந்தச் சமூக ஊடகச் சீரழிவுகள் சரியாகும் என்றும் அவர் தனது பேட்டியில் ஆணித்தரமாகக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in