“நல்ல காதலி நல்ல மனைவியாக முடியாது..” தவெக அரசு எடுத்த திடீர் U-Turn அரசியலை கடுமையாக விமர்சித்த ஆதரவாளர் மதிவாணன்.. தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“நல்ல காதலி நல்ல மனைவியாக முடியாது..” தவெக அரசு எடுத்த திடீர் U-Turn அரசியலை கடுமையாக விமர்சித்த ஆதரவாளர் மதிவாணன்.. தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு..!!

Published

on

தமிழகத்தில் தவெக அரசு, தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-இன் கீழ் பொது துறைக்கு விலக்கு அளிப்பதாக ஒரு அரசாணையை வெளியிட்டு, பின்னர் பல்வேறு கட்சிகளின் கடுமையான எதிர்ப்புகளால் அதனை உடனடியாகத் திரும்பப் பெற்றது. இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடந்த நேரலை விவாதத்தில் கலந்துகொண்ட தவெக ஆதரவாளர் மதிவாணன், கட்சியின் இந்த திடீர் யூ-டர்ன் முடிவை முதன்முறையாகக் கடுமையாக விமர்சித்துள்ளார். “இந்த ஆட்சியை நடத்துவது முதலமைச்சர் விஜய்யா, அதிகாரிகளா, அமைச்சர்களா அல்லது தேர்தல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமியா?” என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளதாக அவர் சாடியுள்ளார்.

தேர்தலுக்கு முன்னால் நல்ல வியூக வகுப்பாளராக இருந்த ஜான் ஆரோக்கியசாமிக்கு, திருமணத்திற்குப் பின் நல்ல மனைவியாக மாற முடியாத ‘நல்ல காதலி’ போல, தற்போது அரசை நடத்துவதற்கான நிர்வாக அனுபவம் போதவில்லை என்று மதிவாணன் விமர்சித்துள்ளார். மேலும், சட்டமன்றத்தில் விவாதிக்காமல் 1200 கோடி ரூபாய் மதிப்பில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவது போன்ற அறிவிப்புகளைத் தன்னிச்சையாக வெளியிடுவதும், எதிர்ப்பு வந்தவுடன் பின்வாங்குவதும் ஒரு மோசமான நிர்வாக நடைமுறை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். தவெக தேர்தல் பிரச்சாரத்தின் போது வெளிப்படையான நிர்வாகம் தருவதாகக் கூறிவிட்டு, தற்போது காலையில் ஒரு முடிவும் மாலையில் ஒரு முடிவும் எடுப்பது தனக்கு ஆச்சரியமாக இருப்பதாக அவர் தனது விவாதத்தில் பதிவு செய்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in