LATEST NEWS
மர்ம மரணம்..! கடைசியாக பேசிய அந்த ஒரே ஒரு போன் கால்… 16 லட்சம் ரசிகர்கள் கொண்ட இன்ஸ்டா பிரபலம் எடுத்த விபரீத முடிவு..!!
மத்தியபிரதேச மாநிலம் சிங்கரலி மாவட்டம் ஹசா மட் பகுதியை சேர்ந்த இளம்பெண் நிந்தி. இவர் இன்ஸ்டாகிராம், பேஸ்புக்கில் மிகவும் பிரபலமாக திகழ்ந்தார். இவருக்கு 16 லட்சம் பாலோவர்கள் உள்ளனர்.
இந்நிலையில், வீட்டில் இருந்த நிந்தி இன்று தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். ஆண் நண்பருடன் செல்போனில் பேசிக்கொண்டிந்த நிந்தி தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். நீண்ட நேரமாகியும் நிந்தி அறையில் இருந்து வெளியே வராததால் சந்தேகமடைந்த பெற்றோர், அறையை திறந்து உள்ளே பார்த்தனர். அங்கு நிந்தி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், நிந்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். நிந்தி கடைசியாக செல்போனில் பேசிய அவரது ஆண் நண்பரான சோனு சிங் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
