அய்யய்யோ… ஜேசிபி இடிச்சு விழுந்த சுவர்… ரத்த வெள்ளத்தில் அலறிய பெண்..! ஆக்கிரமிப்பு அகற்றத்தின் போது நடந்த அசம்பாவிதம்.. கொந்தளித்த மக்கள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அய்யய்யோ… ஜேசிபி இடிச்சு விழுந்த சுவர்… ரத்த வெள்ளத்தில் அலறிய பெண்..! ஆக்கிரமிப்பு அகற்றத்தின் போது நடந்த அசம்பாவிதம்.. கொந்தளித்த மக்கள்..!!

Published

on

பீகார் மாநிலம் மோதிஹாரி மாவட்டத்தில் உள்ள சுகௌலி தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையின் போது பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சிஸ்வனியா டோலா வார்டு எண்-06 பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நிர்வாகக் குழுவினர் ஜேசிபி இயந்திரத்துடன் வந்தனர். சனாவுல்லா மியா என்பவரின் கூரை வீடுகளை ஜேசிபி மூலம் இடிக்கும் பணி நடைபெற்றபோது, திடீரென செங்கல் சுவர் ஒன்று சரிந்து விழுந்தது. அப்போது அங்கே நின்று கொண்டிருந்த சனாவுல்லாவின் சகோதரி மகளான லாட்லி பிரவீன் என்பவர் மீது சுவர் விழுந்ததில் அவர் பலத்த காயமடைந்தார்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, காயமடைந்த பெண்ணை உடனடியாக அவரது குடும்பத்தினரும் பகுதி மக்களும் சுகௌலி சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட பின்னர், பெண்ணின் நிலைமையைக் கருத்தில் கொண்டு மருத்துவர்கள் அவரை மோதிஹாரி அரசு மருத்துவமனைக்கு மேலதிக சிகிச்சைக்காக பரிந்துரைத்தனர். இச்சம்பவத்தால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் மற்றும் குடும்பத்தினர் நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், அங்கிருந்து புறப்பட்டுச் செல்ல முயன்ற ஜேசிபி இயந்திரத்தின் மீது கோபமடைந்த மக்கள் கற்களை வீசித் தாக்குதல் நடத்தியதால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.

Advertisement

சுமார் 50 ஆண்டுகளாக அதே இடத்தில் வசதித்து வருவதாகக் கூறும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், வீட்டை விட்டு வெளியேற தங்களுக்குப் போதிய அவகாசம் வழங்கப்படாமல் திடீரென இந்த இடிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளனர். தங்களுக்கென்று சொந்தமாக வேறு நிலம் எதுவுமில்லை என்றும், இந்த வீடே தங்களின் வாழ்வாதாரமாக இருந்தது என்றும் தெரிவித்தனர். தங்களது வீடு இடிக்கப்பட்டுள்ளதால் தங்குவதற்கு இடமின்றி தவித்து வரும் இக்குடும்பத்தினர், தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவதோடு மாற்று இருப்பிட வசதியையும் அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் செய்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in