LATEST NEWS
அடக் கடவுளே..! பொடுகு வர்றதுக்கு நாம தினமும் பண்ற இந்த விஷயம்தான் காரணமா..? இத்தனை நாளா இது தெரியாம போச்சே..!!
தலையில் பொடுகு ஏற்பட்டுவிட்டால் நிச்சயமாக அதிகளவில் முடி உதிர்தல் உண்டாகும். அந்தப் பொடுகைக் கட்டுப்படுத்தவும், அதிக முடி உதிர்வதைத் தடுக்கவும் தலையில் பலரும் எண்ணெய் தேய்ப்பது உண்டு. முடி வறட்சியாக இருந்தாலும் பொடுகு மற்றும் முடி உதிர்தல் வரும் என்ற ஒரு கருத்து நிலவுகிறது. உண்மையில் பொடுகு அதிகம் இருக்கும் வேளையில் நாம் எண்ணெய் தேய்க்கலாமா என்பது பற்றிப் பார்ப்போம்.
பொடுகு என்பது உச்சந்தலையில் உருவாகும் ‘மலாசீசியா’ என்ற ஈஸ்ட் பூஞ்சை என்றும், அது உச்சந்தலையில் உள்ள எண்ணெயைத்தான் உணவாக உட்கொள்கிறது என்றும் கூறப்படுகிறது. எனவே, பொடுகு அதிகம் இருக்கின்ற வேளையில் எண்ணெய் தடவுவது அந்த நிலையை இன்னும் தீவிரமடையச் செய்யும். அதற்காக நீங்கள் எண்ணெயைத் தலையில் தடவுவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும் என்பதில்லை. குறிப்பிட்ட சில எண்ணெய்களைத் தேய்ப்பதைத் தவிர்த்துவிடலாம்; அதாவது அதிக அடர்த்தி கொண்ட தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.
மேலும், உங்களுடைய தலைமுடி வறட்சியாக இருப்பது போல் உணர்ந்தால், தலைக்குக் குளிப்பதற்கு முன்பாகச் சிறிது எண்ணெய் தடவிப் பிறகு குளிக்கலாம். தொடர்ந்து தலையில் நீண்ட நேரம் எண்ணெய் வைத்திருப்பதைத் தவிர்ப்பது நல்லது. பொடுகு வருகின்ற நேரத்தில் எதனால் பொடுகு வருகிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். தலையில் அதிக அளவு அழுக்கு சேர்ந்தாலோ, சரியாகத் தலைமுடியைப் பராமரிக்காமல் இருந்தாலோ இவ்வாறான சிக்கல்கள் வரலாம். பொடுகைக் குறைக்கும் அதிக இரசாயனம் இல்லாத தயாரிப்புகளைத் தேர்வு செய்து பயன்படுத்துவது நல்லது. பொடுகு நீக்குவதற்காகச் சில முக்கியமான பொருட்களைப் பயன்படுத்தும் பொழுது மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுப் பயன்படுத்துவது நன்மை தரும்.
