LifeStyle
ஒரு பைசா கூட நஷ்டமாகாது…! தினமும் வெறும் ₹50 சேமித்தால் ₹35 லட்சம் கிடைக்கும்….. போஸ்ட் ஆபீஸின் அசத்தலான முதலீடு திட்டம்…!!
மத்திய அரசின் கீழ் இயங்கும் இந்திய அஞ்சல் துறை, கிராமப்புற ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தின் (RPLI) ஒரு பகுதியாக ‘கிராம் சுரக்ஷா யோஜனா’ என்ற மிகச்சிறந்த சிறு சேமிப்புத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. சந்தை அபாயங்கள் ஏதுமின்றி, தங்களின் உழைப்புப் பணத்திற்குப் பாதுகாப்பான லாபத்தை எதிர்பார்க்கும் மக்களுக்கு இத்திட்டம் ஒரு வரப்பிரசாதமாகும்.
இதில் 19 வயது முதல் 55 வயது வரை உள்ள எந்தவொரு இந்தியக் குடிமகனும் தாராளமாகத் தங்களது கணக்கைத் தொடங்கலாம். குறைந்தபட்சமாக 10,000 ரூபாய் முதல் அதிகபட்சமாக 10 லட்சம் ரூபாய் வரையிலான காப்பீட்டுத் தொகைக்கு பாலிசிகளைப் பெற்று, தங்களின் வசதிக்கேற்ப பிரீமியத் தொகையை மாதம் அல்லது ஆண்டுக்கு ஒருமுறை எனத் தேர்வு செய்து செலுத்தும் வசதியும் இதில் உள்ளது.
இத்திட்டத்தின் கணக்கீட்டின்படி, 19 வயதான நபர் ஒருவர் 10 லட்சம் ரூபாய்க்கான பாலிசியைத் தேர்ந்தெடுத்து, தினசரி வெறும் 50 ரூபாய் (மாதம் ₹1,515) வரை முதலீடு செய்யும்போது, அவர் 80 வயதை எட்டும்போது முதிர்வுத் தொகையாக சுமார் 31.60 லட்சம் முதல் 35 லட்சம் ரூபாய் வரை உத்தரவாதமாகப் பெற முடியும். இந்தத் திட்டத்தில் பாலிசிதாரர்கள் 55, 58 அல்லது 60 வயது வரை பிரீமியம் செலுத்துவதற்கான நெகிழ்வுத்தன்மை வழங்கப்படுகிறது.
மேலும், அவசரக் காலங்களில் நிதித் தேவையை பூர்த்தி செய்ய பாலிசி தொடங்கி 3 ஆண்டுகள் நிறைவடைந்ததும், அதன் கணக்கின் மீது கடன் பெறும் வசதியும், பாலிசியை ரத்து செய்து பணத்தை பெரும் வாய்ப்பும் உள்ளது. மிகக் குறைந்த முதலீட்டில் முதுமைக் காலத்தை நிம்மதியாக்க நினைப்போருக்கு இதுவொரு மிகச்சிறந்த வாய்ப்பாகும்.
