உங்க விரல் நகத்தில் இந்த ஒரு கோடு இருக்கா?.. அலட்சியமா இருக்காதீங்க… உயிர் ஆபத்து வரலாம்.. டாக்டர் பகீர் எச்சரிக்கை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

உங்க விரல் நகத்தில் இந்த ஒரு கோடு இருக்கா?.. அலட்சியமா இருக்காதீங்க… உயிர் ஆபத்து வரலாம்.. டாக்டர் பகீர் எச்சரிக்கை..!!

Published

on

உடலில் தோன்றும் சிறிய மாற்றங்களைக் கூட அலட்சியப்படுத்தக் கூடாது என்பதற்கு விரல் நகங்களில் ஏற்படும் மாற்றங்கள் சிறந்த சான்றாகும். அமெரிக்க தோல் மருத்துவர் டாக்டர் லின்ட்சே ஜூப்ரிட்ஸ்கி தெரிவித்துள்ளபடி, நகங்களில் தோன்றும் கருமையான கோடுகள் ‘சப்யூங்குவல் மெலனோமா’ எனப்படும் அபாயகரமான தோல் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம். நகங்களில் அடிபடுவதால் ஏற்படும் சாதாரண கோடுகள் நகம் வளர வளர தானாகவே மறைந்துவிடும். ஆனால், இந்த புற்றுநோய் தொடர்பான கோடுகள் நீண்ட நாட்களாக மறையாமல் இருப்பதுடன், நாளுக்கு நாள் நகத்தைச் சுற்றியுள்ள தோல் பகுதிக்கும் பரவக்கூடும்.

அதனை தொடர்ந்து நகங்களில் உள்ள கருப்பு கோடு மெதுவாக அகலமாவது, நகம் பிளவுபடுவது, நகப்படுக்கையில் இருந்து பிரிவது, வீக்கம், வலி அல்லது இரத்தக்கசிவு ஏற்படுவது போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக விழிப்புடன் செயல்பட வேண்டும். உலகளவில் இதய நோய் மற்றும் புற்றுநோயால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு நோயை ஆரம்பத்திலேயே கண்டறியத் தவறுவதே முக்கிய காரணமாக அமைகிறது. எனவே, இதுபோன்ற மாற்றங்களை சாதாரணப் பிரச்சனையாகக் கருதி புறக்கணிக்காமல், உடனடியாகத் தோல் மருத்துவரை அணுகி உரிய பரிசோதனை மற்றும் சிகிச்சை மேற்கொள்வது நோயைக் குணப்படுத்தும் வாய்ப்பை பெருமளவில் அதிகரிக்கும்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in