குற்றவாளிகளை கைது பண்ணியாச்சு…. மறுதேர்வும் நடத்தி முடிச்சாச்சு… இனி என்ன பிரச்சனை.? நீட் போராட்டம் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளுக்கு நிர்மலா சீதாராமன் அதிரடி பதிலடி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

குற்றவாளிகளை கைது பண்ணியாச்சு…. மறுதேர்வும் நடத்தி முடிச்சாச்சு… இனி என்ன பிரச்சனை.? நீட் போராட்டம் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளுக்கு நிர்மலா சீதாராமன் அதிரடி பதிலடி..!!

Published

on

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் மற்றும் அரசின் துரிதமான நடவடிக்கைகள் குறித்து விரிவாகப் பேசினார். வினாத்தாள் கசிந்த தொடக்கத்தில் சில இளைஞர்கள் தாங்கள் பாதிக்கப்பட்டதாக உணர்ந்தாலும், பின்னர் கிடைத்த கால அவகாசத்தைப் பயன்படுத்தித் தேர்வுக்குத் தங்களை இன்னும் சிறப்பாகத் தயார்படுத்திக் கொண்டு அதிக மதிப்பெண்களைப் பெற்றதாகத் தெரிவித்தனர் என்று சுட்டிக்காட்டினார். இத்தகைய சவால்களை எதிர்கொண்டு இளைஞர்கள் தங்களின் சிறந்த எதிர்காலத்தை நோக்கி முன்நகர்ந்துள்ளது, அரசின் முறையான நடவடிக்கைகளுக்கே சான்றாக அமைந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தொடர்பான விஷயங்களில், குறிப்பாகத் தேர்வுகளில் வினாத்தாள் கசிந்து மறுதேர்வு நடக்கும் சூழ்நிலைகளில் மாணவர்கள் மனபதற்றம் அடைவது அந்த வயதுக்கு இயல்பானதுதான் என்பதை அரசு உணர்ந்துள்ளதாகத் தெரிவித்தார். அரசு இதுபோன்ற விவகாரங்களில் தீவிரமாகச் செயல்படாமலோ அல்லது உரிய நடவடிக்கை எடுக்காமலோ இருந்தால் எதிர்க்கட்சிகள் கோபமடைவதில் நியாயம் இருக்கிறது என்றும், அதைத் தன்னால் புரிந்து கொள்ள முடிகிறது என்றும் அவர் கூறினார்.

Advertisement

இருப்பினும், பிரதமர் நரேந்திர மோடியின் தலையீட்டால் அரசு உடனடியாகச் செயல்பட்டு குற்றவாளிகளை உரிய நேரத்தில் கைது செய்ததாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். மறுதேர்வு தகுந்த நேரத்தில் நடத்தப்பட்டு முடிவுகளும் விரைவாக அறிவிக்கப்பட்டதால், மாணவர்கள் தாமதமின்றித் தங்களின் உயர்கல்வி நிறுவனங்களைத் தேர்வு செய்து படித்து வருகின்றனர். அரசின் இந்தத் துரிதமான மற்றும் தீவிரமான நடவடிக்கைகளின் காரணமாக, எதிர்க்கட்சிகளின் அரசியல் கோபம் முற்றிலும் பயனின்றிப் போய்விட்டது என்று அவர் விமர்சித்தார்.

இறுதியாக, வினாத்தாளைக் கசிய விட்டவர்கள், அதை வாங்கியவர்கள் மற்றும் விற்பனை செய்தவர்களுக்கு விரைவாகத் தண்டனை பெற்றுத்தர விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வருவதற்கு முன்பாகவே, நீட் வினாத்தாள் கசிவில் தொடர்புடைய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுவிட்டனர் என்பதை அவர் தெளிவுபடுத்தினார். இதன் மூலம் அரசு மாணவர்களின் நலனில் எப்போதுமே உறுதியாகவும் விரைவாகவும் செயல்படுகிறது என்பதை வலியுறுத்தினார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in