ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு… கடவுளுக்கு ரொம்ப நன்றி… முதலமைச்சர் விஜய்யின் தயார் ஷோபா உருக்கம்…!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு… கடவுளுக்கு ரொம்ப நன்றி… முதலமைச்சர் விஜய்யின் தயார் ஷோபா உருக்கம்…!!!

Published

on

சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் நடைபெற்ற 80-வது சுதந்திர தின விழாவில், தமிழக முதலமைச்சர் விஜய் முதன்முறையாகத் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் அவரது தாயார் ஷோபா சந்திரசேகர் நேரில் கலந்துகொண்டு விழாவைக் கண்டுகளித்தார். தன் மகன் முதலமைச்சராகக் கொடியேற்றிய இந்தத் தருணம் ஒட்டுமொத்தக் குடும்பத்தினருக்கும் பெருமிதம் சேர்க்கும் நிகழ்வாக அமைந்தது.

விழா நிறைவு பெற்ற பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஷோபா சந்திரசேகர், நாட்டு மக்கள் அனைவருக்கும் தனது நெஞ்சார்ந்த சுதந்திர தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். மேலும், இந்தத் தருணம் தனக்கு மிகவும் மகிழ்ச்சியளிப்பதாகவும், இந்த நிலைக்குத் தன் மகனைக் கொண்டு சேர்த்ததற்காகக் கடவுளுக்கு நன்றியைக் கூறிக்கொள்வதாகவும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in