“பணம் கட்ட முடியாது, போங்க..!” வாடிக்கையாளர்களை அலைக்கழித்து அராஜகம்செய்த PNB வங்கி காசாளர்.. கொந்தளித்த நெட்டிசன்கள்.. இளையதளத்தில் வைரலாகும் பகீர் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“பணம் கட்ட முடியாது, போங்க..!” வாடிக்கையாளர்களை அலைக்கழித்து அராஜகம்செய்த PNB வங்கி காசாளர்.. கொந்தளித்த நெட்டிசன்கள்.. இளையதளத்தில் வைரலாகும் பகீர் சம்பவம்..!!

Published

on

பஞ்சாப் நேஷனல் பாங்கின் பிபரியா கிளை காசாளர் ஒருவர், வாடிக்கையாளர்களின் பணத்தை டெபாசிட் செய்ய மறுத்து அராஜகத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. வங்கிக்கு வந்த வாடிக்கையாளர் பணம் செலுத்த முயன்றபோது, காசாளர் மதியம் 2 மணி முதல் 3:30 மணி வரை எந்தவிதப் பணியும் செய்யாமல் சாதாரணமாகச் சுற்றித் திரிந்துள்ளார். வாடிக்கையாளர் மணி நேரம் காத்துக் கிடந்த நிலையில், வங்கி மூடும் நேரமான 4 மணிக்குச் சற்று முன்பு தனது இருக்கைக்கு வந்துள்ளார். ஆனால், வாடிக்கையாளர் பணத்தை நீட்டியதும், அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அந்த அதிகாரி திட்டவட்டமாக மறுத்து அலட்சியம் காட்டியுள்ளார்.

बैंक वालों ने आम जनता को बेवकूफ समझ रखा है ये लोग बैंक को अपने बाप की समझ लेते हैं

ये महाशय PNB पंजाब नेशनल बैंक की पिपरिया शाखा में कैशियर है इन्होंने पैसे जमा करने से मना कर दिए हैं

एक ग्राहक इनके शाखा में पैसे जमा करने आता है जहां पर ये कैसियर साहब 2 बजे से लगातार साढ़े 3… pic.twitter.com/l7ZKcbqR8y— Anshi yadav (@AnsHi_0X) August 15, 2026

வங்கிகளை மக்களின் பணப் பாதுகாப்பு மையமாகப் பார்க்காமல், ஏதோ தங்களது சொந்தச் சொத்து போலப் பொதுமக்களை அலைக்கழிக்கும் இதுபோன்ற ஊழியர்களின் திமிர் பிடித்த செயலால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். அரசுப் பணத்தில் சம்பளம் பெற்றுக்கொண்டு பொதுமக்களை முட்டாள்களாக நினைத்து செயல்படும் இதுபோன்ற வங்கி அதிகாரிகளுக்கு எதிராக மக்கள் மத்தியில் ஆவேசம் எழுந்துள்ளது. உரிய நேரத்தில் சேவை வழங்க மறுத்து, வாடிக்கையாளர்களைத் திணறடிக்கும் இது போன்ற அலட்சியப் போக்கு மீதும், சம்பந்தப்பட்ட காசாளர் மீதும் வங்கி நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை தற்போது வலுத்து வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in