“AI-ல ஜெயிக்கிறவன் தான் உலகத்தையே ஜெயிப்பான்..” பதறியடித்து ட்வீட் போட்ட டிரம்ப்… அசுர வேக வளர்ச்சியை முடக்க நினைக்கும் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“AI-ல ஜெயிக்கிறவன் தான் உலகத்தையே ஜெயிப்பான்..” பதறியடித்து ட்வீட் போட்ட டிரம்ப்… அசுர வேக வளர்ச்சியை முடக்க நினைக்கும் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை..!!

Published

on

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அசுர வேகத்தில் வளர்ந்து வரும் நிலையில், அதன் அதிவேக வளர்ச்சியைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற விவாதம் மேலெழுந்துள்ளது. அமெரிக்காவின் ஆந்திரோபிக் ஏஐ நிறுவன சிஇஓ டேரியோ அமோடி, ஏஐ தொழில்நுட்பத்தின் வேகத்தைக் குறைக்க வேண்டும் என்றும், கூடுதல் பாதுகாப்புக் கட்டுப்பாடுகள் தேவை என்றும் வலியுறுத்தியிருந்தார். இந்த கருத்துக்கு எக்ஸ் ஏஐ தலைவர் எலான் மஸ்க், ஓபன் ஏஐ சிஇஓ சாம் ஆல்ட்மேன் ஆகியோரும் உடன்பட்டுள்ளனர்.

ஆனால், அமெரிக்காவில் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியைக் கட்டுப்படுத்தினால் அது சீனாவுக்குச் சாதகமாகிவிடும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். தனது ‘ட்ரூத் சோஷியல்’ சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள டொனால்ட் டிரம்ப், “ஏஐக்கு கூடுதல் விதிகளோ கட்டுப்பாடுகளோ தேவையில்லை; ஒரு வலுவான, அறிவார்ந்த – High IQ கொண்ட அதிபர் மட்டுமே தேவை, அது அமெரிக்காவிடம் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

மேலும் சீனா பற்றி எச்சரித்த டிரம்ப், “ஏஐ மற்றும் டேட்டா சென்டர்களுக்கு எதிராக ஒரு சதி நடக்கிறது. இதனால் மகிழ்ச்சியடையும் ஒரே நாடு சீனா மட்டுமே. ஏஐ இல் யார் வெல்கிறார்களோ, அவர்களே உலகை வெல்வார்கள்!” எனக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், வளர்ச்சி வேகத்தைக் குறைக்கக் கோரிய ஆந்திரோபிக் சிஇஓ டேரியோ அமோடி உலகைக் காக்க வந்த “perfect little angel” போல நடிப்பதாக விமர்சித்த டிரம்ப், தவறான விஷயங்களைத் தடுத்து நிறுத்தத் தனது நிர்வாகத்திற்கு ஏஐ நிறுவனங்கள் மீது சட்டரீதியான முழு அதிகாரம் உள்ளது என்றும் கூறியுள்ளார்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in