LATEST NEWS
“போட்டி நடுவே இப்படியா…?” ட்ராக்கிலேயே கழிவு வெளியேறியும் ஓட்டத்தை நிறுத்தாத வீராங்கனை… விமர்சித்த சக வீரர்களுக்கு ஒரே வரியில் சவால் விட்ட ஜோனா வியெட்ஸிக்..!!
பெய்ஜிங்கில் நடைபெற்ற ‘ஹைராக்ஸ்’ போட்டியின் போது, ஆஸ்திரேலிய வீராங்கனையான ஜோனா வியெட்ஸிக் தீவிரமான உடல் உழைப்பு மற்றும் அழுத்தத்தின் காரணமாகத் தற்செயலாக மலக்கழிவை வெளியேற்றினார். இருப்பினும், அதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து ஓடி போட்டியை வெற்றிகரமாக முடித்தார். சீன சமூக வலைத்தளங்களில் வெளியான வீடியோக்களில், அவரது கால்களில் கழிவுகள் இருந்தபோதிலும் அவர் பல்வேறு பயிற்சிக் கட்டங்களைக் கடந்து போட்டியைத் தொடர்ந்தது தெரியவந்துள்ளது. போட்டிக்குப் பிறகு, “கடினமாக உழை அல்லது வீட்டிற்குச் செல்… வெற்றி என்பது வெற்றிதான்” என்று தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தனக்கு ஆதரவளித்தவர்களுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, தரையில் படிந்த கழிவுகளால் தளம் வழுக்கும் தன்மையாக மாறியதாகவும், இதனால் தாங்கள் சறுக்கி விழுந்து தங்களது செயல்திறன் பாதிக்கப்பட்டதாகவும் சக விளையாட்டு வீரர்கள் குற்றம் சாட்டினர். இருப்பினும், சக போட்டியாளர்களின் இந்தக் புகார்களை ஜோனா வியெட்ஸிக் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. இதற்கிடையில், இந்தச் சம்பவம் தெரிந்த பிறகும் அவரைப் போட்டியில் இருந்து நிறுத்தாமல் தொடர்ந்து ஓட அனுமதித்ததற்காக, போட்டி அமைப்பாளர்கள் மீது சமூக வலைத்தளங்களில் பலரும் தங்களது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
https://www.instagram.com/reel/DdOm0wkitJ7/?utm_source=ig_web_button_share_sheet
சம்பவம் நடந்த உடனடியாக, பாதிக்கப்பட்ட பகுதியைத் தனிமைப்படுத்தி கிருமிநாசினி தெளித்ததாகவும், விதிமுறைகளின்படி உபகரணங்கள் மற்றும் கழிவுகளை அகற்றியதாகவும் போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். போட்டி முடிந்த பிறகு, கார்பெட்டை மாற்றி முழுமையான தூய்மைப்படுத்தும் பணிகளையும் மேற்கொண்டதாகக் கூறியுள்ளனர். இருப்பினும், இந்தச் சம்பவம் மற்ற வீரர்களின் சுகாதாரம் மற்றும் ஆரோக்கியத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தியதாக இணையத்தில் பரவலாகக் கவலைகள் எழுப்பப்பட்டு வருகின்றன.
