கே.என்.நேருவை தொடர்ந்து அன்பில் மகேஷ் வீட்டில் சோதனை… காலையிலேயே பரபரக்கும் அரசியல் வட்டாரம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

கே.என்.நேருவை தொடர்ந்து அன்பில் மகேஷ் வீட்டில் சோதனை… காலையிலேயே பரபரக்கும் அரசியல் வட்டாரம்..!!

Published

on

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்ததில் இருந்து, கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் பல்வேறு துறைகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் குற்றம்சாட்டி வருகிறார். ஊழல் செய்தவர்கள் தப்ப முடியாது என அவர் எச்சரித்திருந்த நிலையில், அண்மையில் திமுக முன்னாள் அமைச்சர் கே. என். நேரு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த அரசியல் பரபரப்புக்கு மத்தியில், இன்று திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வீடுகளில் மத்திய குற்றப்பிரிவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சோதனையைத் தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகுமாறு மகேஷுக்கு சம்மன் அனுப்பப்படவுள்ளதாகவும், இதனால் தமிழக அரசியலில் திமுக மற்றும் தவெக வினரிடையே மோதல் போக்கு மேலும் அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in