LATEST NEWS
உச்சகட்ட பரபரப்பு..! “அவர முதல்ல விசாரியுங்க” அமைச்சராக இருந்து கொண்டே லஞ்சம் கொடுத்தேன்னு சொல்றாரே… லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த அன்பில் மகேஷ் அதிரடி கோரிக்கை..!!
முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், “ஒரு அமைச்சராக இருந்து கொண்டு, லஞ்சம் கொடுத்தேன் என சட்டப்பேரவையில் கூறியுள்ள அமைச்சர் மரிய வில்சனை லஞ்ச ஒழிப்புத்துறை உடனடியாக விசாரிக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார். அமைச்சர் மரிய வில்சன் தன் மீது சுமத்திய லஞ்சக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்த அதிரடி கோரிக்கையை அவர் முன்வைத்துள்ளார்.
முன்னதாக, திமுக ஆட்சியில் தி.நகர் அலுவலகத்தில் வைத்து தன்னிடம் லஞ்சம் வாங்கப்பட்டதாக அமைச்சர் மரிய வில்சன் சட்டப்பேரவையில் மறைமுகக் குற்றச்சாட்டை எழுப்பியிருந்தார். அதற்குப் பதிலளிக்கும் விதமாக, லஞ்சம் கொடுத்ததாக ஒப்புக்கொண்ட அமைச்சர் மரிய வில்சன் மீதே லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த வேண்டும் என அன்பில் மகேஷ் பகிரங்கமாகச் சவால் விடுத்துள்ளார்.
