“அங்கிள் நான் உங்களை ரொம்ப மிஸ் பண்ணேன்…” கயிற்றில் தொங்கிய தொழிலாளிக்குச் சிறுமி செய்த காரியம்… 1.7 கோடி பேரின் இதயங்களை வென்ற நெகிழ்ச்சி வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அங்கிள் நான் உங்களை ரொம்ப மிஸ் பண்ணேன்…” கயிற்றில் தொங்கிய தொழிலாளிக்குச் சிறுமி செய்த காரியம்… 1.7 கோடி பேரின் இதயங்களை வென்ற நெகிழ்ச்சி வீடியோ..!!

Published

on

சமூக வலைத்தளங்களில் தற்போது ஒரு சிறுமிக்கும் கட்டிடத்தின் வெளிப்பகுதியில் வேலை செய்யும் நபருக்கும் இடையே நடக்கும் நெகிழ்ச்சியான உரையாடல் வீடியோ வைரலாகி வருகிறது. ‘யாமி டைரீஸ்’ (@yami.diaries) என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவில், சிறுமி யாமி தனது வீட்டின் பால்கனியில் இருந்து, உயரமான கட்டிடத்தில் கயிற்றின் உதவியுடன் வேலை செய்து கொண்டிருக்கும் ஜீஷான் என்ற நபரிடம் பேசுகிறார். இதில் எந்தவிதமான போலித்தனமும் இல்லாமல், இருவரும் மிகவும் இயல்பாகவும் அன்பாகவும் பேசிக்கொள்ளும் அழகிய தருணம் பார்ப்பவர்களின் மனதை நெகிழ வைத்துள்ளது. இதனால் இந்த வீடியோவை இதுவரை 1.7 கோடிக்கும் அதிகமானோர் கண்டு ரசித்துள்ளனர்.

வீடியோவின் தொடக்கத்தில் பால்கனிக்கு வரும் யாமி, வெளியே கயிற்றில் தொங்கியபடி வேலை பார்க்கும் ஜீஷானைப் பார்த்ததும் மிக வெள்ளந்தியாக “அங்கிள், நான் உங்களை ரொம்ப மிஸ் பண்ணேன்” என்று கூறுகிறார். அதற்கு ஜீஷானும் அன்போடு தானும் அவளை நினைத்ததாகக் கூறுகிறார். தொடர்ந்து, தான் பள்ளிக்குச் சென்று வந்த கதையை யமி அவரிடம் கூற, ஜீஷானும் தனது வேலையைச் செய்துகொண்டே மிகவும் கவனமாகவும் பாசத்துடனும் அவளுடைய பேச்சைக் கேட்கிறார். இருவருக்கும் இடையே ஏற்கனவே ஒரு நல்ல பிணைப்பு இருப்பதை இந்தச் உரையாடல் தெளிவாகக் காட்டுகிறது.

Advertisement

https://www.instagram.com/reel/Ddyp-qexYhC/?utm_source=ig_web_button_share_sheet

இதன் தொடர்ச்சியாக, ஏற்கனவே வாக்குறுதி அளித்தபடி இருவரும் நேரில் சந்திக்கும் நிகழ்வும் வீடியோவில் இடம் பெற்றுள்ளது. அப்போது, ஜீஷானுக்காகச் சிறுமி யமி சமோசா உள்ளிட்ட சில பலகாரங்களைக் கொண்டு வந்து தன் சொந்தக் கைகளாலேயே அவருக்குக் கொடுக்கிறாள். தன் ‘அங்கிளை’ நேரில் பார்த்த மகிழ்ச்சியில் அவரை அணைத்துக் கொள்ளும் அந்தத் தருணம் மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக அமைந்துள்ளது. எவ்வித நாடகத்தனமும் இல்லாமல், ஒரு குழந்தைக்குத் தன் அன்புக்குரிய நபரிடம் இருக்கும் தூய்மையான பாசத்தையும் வெளிப்படையான உணர்வுகளையும் காட்டும் இந்த வீடியோ இணையவாசிகளின் இதயங்களை வென்று வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in