LATEST NEWS
“காசு தர முடியாது போடா…” ஏழை ராபிடோ ஓட்டுநரின் வயிற்றில் அடித்த பெண் பயணி.. இணையத்தில் வெடிக்கும் நெட்டிசன்கள்..!!
ஒரு பெண்ணாக இருப்பதற்காக யாரும் இப்படியொரு தவறான நன்மையை எடுத்துக்கொள்ளக் கூடாது என்ற வாசகத்துடன், பெண் பயணி ஒருவர் ராபிடோ ஓட்டுநருக்குப் பணம் தராமல் ஏமாற்ற முயன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அந்தப் பெண் தனது அலுவலகத்திற்குச் செல்வதற்காக ராபிடோ பைக் சேவையை முன்பதிவு செய்து பயணித்துள்ளார். ஆனால், குறிப்பிட்ட இடத்தை அடைந்தவுடன், அவர் பயணக் கட்டணத்தைச் செலுத்தாமல் அங்கிருந்து அப்படியே நழுவ முயன்றுள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த ஏழை ராபிடோ ஓட்டுநர், அவரிடம் பயணக் கட்டணத்தைக் கேட்கவே, அந்தப் பெண் அவரோடு வீணாக வாக்குவாதத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளார்.
ஒருவர் பெண்ணாகப் பிறந்துவிட்டார் என்பதாலேயே, உழைக்கும் ஏழைத் தொழிலாளியை ஏமாற்றி என்ன வேண்டுமானாலும் செய்துவிடலாமா என்ற நியாயமான கோபக் குரல்கள் இணையத்தில் எழுந்துள்ளன. தன் அன்றாடப் பிழைப்பிற்காகவும், குடும்பத்தைக் காப்பாற்றவும் வெயிலிலும் மழையிலும் பைக் ஓட்டும் ஒரு ஏழையின் வயிற்றிலடிப்பது எந்த விதத்தில் நியாயம் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். தங்களின் சொந்தத் தேவைகளுக்காகவும் சுயநலத்திற்காகவும் இதுபோன்று உழைப்பாளர்களின் உழைப்பைச் சுரண்டுபவர்களுக்கு எதிராகச் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
