LATEST NEWS
போகிறபோக்கில் ஒரு “வணக்கம்”… விஜய்யின் செயலால் அப்செட்டான செம்மலை… கொதிக்கும் ஆதரவாளர்கள்..!!
தவெகவில் இணைந்த மூத்த தலைவர் செம்மலை கடும் அப்செட்டில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரச்சாரத்தின் போது போகிறபோக்கில் வெறும் “வணக்கம்” மட்டும் சொல்லிவிட்டு தவெக தலைவர் விஜய் சென்றுவிட, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனைத் தவிர அங்கிருந்த பிற தலைவர்களோ நிர்வாகிகளோ அவரைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
கடந்த 1980 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவில் எம்.ஜி.ஆர் போட்டியிட சீட் தராதபோதும், தைரியமாகச் சுயேச்சை வேட்பாளராகக் களம் இறங்கி வெற்றி பெற்ற வரலாறு கொண்டவர் செம்மலை. அப்படிப்பட்ட மூத்த அரசியல் தலைவரைத் தவெக தலைவர் விஜய் தனது பிரச்சார வேனில் கூட ஏற்றி கௌரவிக்கவில்லையே என்றும், அவருக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என்றும் அவரது ஆதரவாளர்கள் கடும் மனவருத்தத்துடனும் ஆதங்கத்துடனும் குமுறி வருகிறார்கள்.
