LATEST NEWS
நடுவானில் நடுங்க வைத்த நொடிகள்… இண்டிகோ விமானத்தை பதம் பார்த்த பறவை.. நூலிழப்பில் உயிர் தப்பிய 272 பயணிகள்..!!
நாக்பூர் விமான நிலையத்திலிருந்து கொல்கத்தா நோக்கி புறப்பட்ட இண்டிகோ (IndiGo) விமானம் 6E812 நடுவானில் பறந்த சில நிமிடங்களிலேயே எதிர்பாராத விதமாகப் பறவை ஒன்றுடன் மோதியது. இந்த திடீர் மோதலால் விமானத்தின் முன்பகுதி பலத்த சேதமடைந்ததுடன், நடுவானில் விமானம் திடீரென நிலைதடுமாறி அலைபாயத் தொடங்கியது. இதனால் விமானத்தில் இருந்த 272 பயணிகள் பெரும் அதிர்ச்சியும் பயமும் அடைந்து, விமானத்திற்குள் பெரும் பரபரப்பான சூழல் உருவானது.
விமானம் நிலைதடுமாறிய அந்த இக்கட்டான இக்கட்டான சூழ்நிலையிலும், பயணிகளைப் பதற்றமடைய வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது. விமானப் பைலட்டுகள் தங்களின் துரித புத்திசாலித்தனத்தாலும், சாதுரியத்தாலும் விமானத்தை உடனடியாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும், உடனடியாக நாக்பூர் விமான நிலையத்தின் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்புகொண்டு, விமானத்தை அங்கு அவசரமாகத் தரையிறக்க அனுமதி கோரினர்.
விமானியின் திறமையான மற்றும் விரைவான செயல்பாட்டின் காரணமாக, பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு விமானம் மீண்டும் நாக்பூர் விமான நிலையத்திலேயே பாதுகாப்பாக அவசரத் தரையிறக்கம் செய்யப்பட்டது. விமானத்தில் இருந்த 272 பயணிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் எவ்வித காயமுமின்றி நல்வாய்ப்பாகப் உயிர் தப்பினர். அதன் பின்னர் பாதுகாப்பு சோதனைகளுக்காக அந்த அன்றைய விமானச் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
