“என்னை என்ன வேணா பேசுங்க… ஆனா என் சகோதரிகள பேசினா…?” தாராபுரத்தில் ஆவேசமடைந்த விஜய்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“என்னை என்ன வேணா பேசுங்க… ஆனா என் சகோதரிகள பேசினா…?” தாராபுரத்தில் ஆவேசமடைந்த விஜய்..!!

Published

on

தாராபுரத்தில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளரை ஆதரித்துத் தவெக தலைவர் விஜய் தீவிரத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். மாருதி நகரில் இருந்து மூலனூர் வரை சுமார் 30 கி.மீ தூரத்திற்கு விசில் அடித்து ரோடு ஷோ மேற்கொண்ட அவர், பிரசாரத்தின் போது மக்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களைப் பார்க்க வரும் நபர் தான் அல்ல என்றும், தன் சொந்தங்களை எப்போது வேண்டுமானாலும் எத்தனை முறை வேண்டுமானாலும் நேரில் வந்து பார்ப்பேன் என்றும் தெரிவித்தார்.

மேலும் உரையாற்றிய அவர், தாராபுரம் பகுதிக்கு வந்து மு.க.ஸ்டாலினும் அவரது மகனும் திமுகவிற்கு ஓட்டுப் போடாதீர்கள் என்று கூறிவிட்டுச் சென்றுள்ளதாகக் குறிப்பிட்டார். மகளிரைப் பற்றி அவதூறாகப் பேசும் திமுகவையோ அல்லது வேறு யாரையுமோ மக்கள் ஆதரிக்கக் கூடாது என்று வேண்டுகோள் விடுத்தார். தாராபுரம் தவெக வேட்பாளர் சத்யபாமா குறித்து எப்படியெல்லாம் பேசிவிட்டுச் சென்றுள்ளார்கள் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

Advertisement

தொடர்ந்து பேசிய அவர், தன்னைப் பற்றி என்ன பேசினாலும் பொறுத்துக் கொள்வதாகவும், ஆனால் தன் சகோதரிகள், மகளிர் அல்லது தவெக தொண்டர்கள் குறித்து அவதூறாகப் பேசினால் அதைப் பொறுத்துக் கொள்ள முடியாது என்றும் எச்சரித்தார். திமுகவுக்கோ அல்லது மற்றவர்களுக்கோ மக்கள் வாக்களித்தால், அது மகளிரை அவதூறாகப் பேசுபவர்களை ஆதரிப்பதற்குச் சமமாகிவிடும் என்றும் அவர் தனது பிரசாரத்தின் போது பேசினார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in