LATEST NEWS
உச்சக்கட்ட பதற்றம்..! திடீரென துண்டிக்கப்பட்ட ரேடார் தொடர்பு.. நடுவானில் மாயமான ஏர் ஆம்புலன்ஸ்… அட்லாண்டிக் கடலில் நடந்த விபரீதம்..!!
வட அட்லாண்டிக் கடலில் அமைந்துள்ள தீவு பெர்முடா. இந்த தீவு இங்கிலாந்தின் கட்டுப்பாட்டில் உள்ள தன்னாட்சி பெற்ற தீவு ஆகும். பெர்முடாவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாகாணம் பாஸ்டன் நகருக்கு நேற்று கல்ப்ஸ்டிரீம் ஜி 100 சிறிய ரக விமானம் புறப்பட்டது. ஏர் ஆம்புலன்சாக செயல்பட்ட அந்த விமானத்தில் 6 பேர் பயணித்தனர். விமானம் அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாகாணத்தின் நன்டக்கெட் தீவு அருகே நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது.
இதையடுத்து, மாயமான ஆம்புலன்ஸ் விமானத்தை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வந்தனர். ஆனால், விமானம் அட்லாண்டிக் கடலில் விழுந்தது தெரியவந்துள்ளது. விமானத்தின் சிதைந்த பாகங்கள் கடலில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.
அதேவேளை, கடலில் விழுந்த ஆம்புலன்ஸ் விமானத்தில் பயணித்த 6 பேரும் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும், 6 பேரின் உடல்களும் இதுவரை மீட்கப்படவில்லை என்றும், தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
