LATEST NEWS
“ஐயோ கடவுளே..!” அலாஸ்கா ராணுவ தளத்தில் நேர்ந்த கொடூரம்.. 8 பேர் கதறித் துடித்த அந்த கடைசி நொடிகள்… நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்..!!
அலாஸ்காவில் உள்ள ‘கேப் நியூனென்ஹாம் லாங் ரேஞ்ச் ரேடார் தள’ விமான நிலையத்தில் அடர்ந்த மூடுபனிக்கு மத்தியில் தரையிறங்க முயன்ற சிறிய விமானம் விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 8 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். அமெரிக்காவின் ஆங்கரேஜில் இருந்து மேற்கே சுமார் 450 மைல் தொலைவில் உள்ள இந்த ராணுவ தளத்தில், வியாழக்கிழமை நண்பகல் வாக்கில் தரையிறங்க மேற்கொண்ட இரண்டாவது முயற்சியின்போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
அடர்ந்த மூடுபனி காரணமாக ஓடுபாதையை பார்க்க முடியாததால், விமானிகள் முழுமையாக விமான கருவிகளை மட்டுமே நம்பி தரையிறங்க முயன்றுள்ளனர். இந்த விபத்தில் பலியானவர்களில் இருவர் அமெரிக்க ராணுவ பொறியியல் பிரிவின் ஊழியர்கள் ஆவர். ரஷ்யா, சீனா மற்றும் வட கொரியாவின் அச்சுறுத்தல்களைக் கண்காணிக்கும் முக்கியப் பணியில் ஈடுபட்டிருந்த இந்த அர்ப்பணிப்புள்ள தொழில்முறை நிபுணர்களின் மரணம், ராணுவக் குடும்பத்திற்கு பேரிழப்பு என்று அமெரிக்க விமானப்படை லெப்டினன்ட் ஜெனரல் ராபர்ட் டேவிஸ் தெரிவித்துள்ளார்.
