LATEST NEWS
“அரசியலைத் தாண்டி சில நிமிடங்கள்” விமானத்தில் நேருக்கு நேர் சந்தித்துக்கொண்ட பரம எதிரிகள்.. தோள தட்டி சிரிக்க வெச்ச திக்விஜய் சிங் – வைரல் வீடியோ..!!
மத்திய விவசாயத்துறை அமைச்சரும் பாஜாக மூத்த தலைவருமான சிவராஜ் சிங் சவுகான் மற்றும் காங்கிரஸின் மூத்த தலைவரும், மத்தியப் பிரதேச முன்னாள் முதலமைச்சருமான திக்விஜய் சிங் ஆகிய இரு அரசியல் எதிரிகள் விமானத்தில் சந்தித்துக் கொண்ட நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது. போபாலில் இருந்து டெல்லி சென்ற ஒரே விமானத்தில் இந்த இரண்டு பரம அரசியல் எதிரிகளும் பயணித்த போது இந்த சுவாரசியமான சந்திப்பு அரங்கேறியுள்ளது.
விமானத்தில் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டவுடன், தங்களது சீட்டுகளை விட்டு எழுந்து வந்து விமானத்தின் நடுவழியில் (Aisle) நின்றபடி இருவரும் மிகவும் நெருக்கமாகவும் கலகலப்பாகவும் பேசத் தொடங்கினர். சிவராஜ் சிங் சவுகானின் முகம் கேமராவில் சரியாகத் தெரியவில்லை என்றாலும், திக்விஜய் சிங் பயங்கரமாகச் சிரித்துக் கொண்டே சவுகானின் தோளைத் தட்டிக் கொடுத்துத் தங்களது நட்பை வெளிப்படுத்தினார். இதை சற்றும் எதிர்பாராத சக பயணிகள் தங்களது மொபைல் போன்களில் இந்த அரிய காட்சியைப் படம் பிடித்து இணையத்தில் பகிர்ந்துள்ளனர்.
அரசியல் மேடைகளில் எதிரும் புதிருமாக மோதிக்கொள்ளும் இந்த இரு பெரும் தலைவர்கள், நிஜ வாழ்க்கையில் தங்களது அரசியல் பகையைத் தாண்டி இப்படி நட்பாகப் பழகுவதைப் பார்த்த நெட்டிசன்கள், “அரசியலைத் தாண்டி சில நொடிகள்…” எனப் பாராட்டி கமெண்ட்டுகளை அள்ளித் தெளித்து வருகின்றனர்.
