“செங்குத்தான பாதையில் சறுக்கும் தமிழ்நாடு..!” தவெக அரசின் நிர்வாகப் புரிதலின்மையைக் கண்டித்து துரைமுருகன் சாடல்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“செங்குத்தான பாதையில் சறுக்கும் தமிழ்நாடு..!” தவெக அரசின் நிர்வாகப் புரிதலின்மையைக் கண்டித்து துரைமுருகன் சாடல்..!!

Published

on

அரசியலில் ஒரு செயலினைச் செய்வதும், அதன்மீதான மக்களின் பொதுப்பார்வை எவ்வாறு இருக்கும் என்பதை உணர்ந்து செயல்படுவதும் மிக மிக முக்கியம் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். முதல்வர் விதி 110-ன் கீழ் எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வழங்கப்படும் என்று அறிவித்ததும், அதை எம்.எல்.ஏ.க்கள் புகழ்ந்து பாடியதும் மக்கள் மத்தியில் பேசுபொருளாகிவிட்டது. அன்றைய தினம் ஏறத்தாழ ரூ.15,000 கோடி மதிப்பிலான துறைசார் மானியக் கோரிக்கைகள் விவாதிக்கப்பட்ட நிலையில், அதைப்பற்றிப் பேசாமல், 5 ஆண்டுகளுக்குச் சேர்த்து ரூ.150 கோடி செலவு வைக்கும் எம்.எல்.ஏ.க்களுக்கான கார் வழங்கும் விஷயத்தையே பிரதானமாக மாற்றிவிட்டனர்.

வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர், ஒன்றியத் தலைவர்கள் எனப் பலருக்கும் அரசு வாகனங்கள் வழங்கப்படும் சூழலில், எம்.எல்.ஏ.க்களுக்கு கார் கோருவது நியாயமற்றது அல்ல என்றும், ஆண்டிற்கு ரூ.30 முதல் ரூ.35 கோடி என்பது அரசு பட்ஜெட்டில் மிகப்பெரிய தொகையல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இருப்பினும், முறையான அதிகாரிகளின் ஆலோசனைகளைப் பெறாமல் ‘எடுத்தேன் கவிழ்த்தேன்’ என்ற அடிப்படையில் தவெக அரசு செயல்பட்டு, இந்தச் சாதாரண விஷயத்தைப் பெரிய பேசுபொருளாக மாற்றித் தலையில் சாணியைக் கரைத்து ஊற்றிக்கொண்டிருக்கிறது. இதுவே திமுக அரசாக இருந்திருந்தால், மாவட்ட நிர்வாகத்திற்கு கூடுதல் வாகனங்களை வழங்கி, தேவைக்கேற்ப எம்.எல்.ஏ.க்கள் பயன்படுத்தும்படி அரசாணை வெளியிட்டுப் படிப்படியாக நேர்த்தியாகக் கையாண்டிருப்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

அரசியலில் ‘ஒளியியல்’ மிக முக்கியம் எனவும், தனக்குக் கிடைக்காத கார் மற்றவர்களுக்கு அரசிடமிருந்து கிடைப்பதைச் சாதாரண மக்கள் எளிதில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் துரைமுருகன் கூறியுள்ளார். மேலும், “வளர்ச்சிப் பாதையில் சென்றுகொண்டிருந்த தமிழ்நாட்டை, எந்த நிர்வாக அனுபவமும் புரிதலும் இல்லாதவர்களிடம் ஒப்படைத்திருக்கிறோம். இது, வேகமாகச் சென்றுகொண்டிருந்த பேருந்தை ஓட்டத் தெரியாத ஒரு டிரைவரை நம்பி மலைப்பாதையில் ஒப்படைத்ததற்குச் சமம். சுற்றி இருப்பவர்கள் சரியான ஆலோசனை சொல்கிறார்களா என்று அறிவதற்குள் 5 ஆண்டுகள் முடிந்து, வண்டி பல நூறு கிலோமீட்டர் பின்னால் வந்துவிடும்” என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in