LATEST NEWS
இவளையெல்லாம் சும்மா விடக்கூடாது..! பெற்ற பிள்ளைகளுக்கே தாய் செய்த காரியத்தை பாருங்க.. நெட்டிசன்களை கொந்தளிக்க வைத்த வைரல் வீடியோ..!!
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில், தனது சமையலறையில் தீ வைப்பதையும், தனது சொந்தக் குழந்தைகள் மீது உருகிய சூடான மெழுகை ஊற்றுவதையும் ஒரு தாய் அவரே காணொளி எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட மெலிசா காம்போஸ்-சான்செஸ் என்ற 26 வயது பெண்மணியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர் மீது குழந்தைகளைத் துன்புறுத்துதல், குழந்தைகளைப் பராமரிக்கத் தவறுதல் (Child neglect) மற்றும் திட்டமிட்டு தீவைத்தல்ஆகிய கடுமையான குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Florida woman films herself starting a fire in her kitchen and pouring hot wax on her children.
Meliza Campos-Sanchez was arrested and charged with child abuse, child neglect, and arson.
Her husband says they were going through marital issues and he had contacted the sheriff’s… pic.twitter.com/7FtnArNWMc— Collin Rugg (@CollinRugg) August 19, 2026
இந்த சம்பவம் குறித்து மெலிசாவின் கணவர் காவல்துறையினரிடம் கூறுகையில், தங்களுக்குள் கடுமையான தம்பதியர் பிரச்சினைகள் இருந்து வந்ததாகத் தெரிவித்துள்ளார். இந்த விபரீதம் நடப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே, தனது குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து அச்சம் தெரிவித்து அவர் உள்ளூர் ஷெரிப் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு முறையிட்டுள்ளார். சம்பவத்தின் போது அவர் தனது பெற்றோருடன் தங்கியிருந்த நிலையில், அவரது மனைவி இந்த விபரீத செயலில் ஈடுபட்டுள்ளார். தற்போது அந்தப் பெண்மணி கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
