LATEST NEWS
“சாணியை கரைச்சு தலையில ஊத்திக்கிச்சு தவெக அரசு”… அப்படியொரு மமதை விஜய்க்கு. எம்.எல்.ஏ-க்களுக்கு கார் வழங்கும் விவகாரத்தில் துரைமுருகன் தாக்கு…!!
தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வழங்கும் விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழக அரசை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கடுமையாக விமர்சித்துள்ளார். தவெக அரசு மமதையில் செயல்படுவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இந்த விவகாரத்தில் அரசு தன் தலையிலேயே சாணியைக் கரைத்து ஊற்றிக்கொண்டிருப்பதாகத் சாடியுள்ளார்.
தான் என்ன செய்தாலும் மக்கள் அதனை ரசிப்பார்கள் என்ற மமதையில் ‘எடுத்தேன் கவிழ்த்தேன்’ என்று தவெக அரசு செயல்படுவதாக துரைமுருகன் குற்றம் சாட்டியுள்ளார். சாதாரணமான ஒரு விவகாரத்தை, இத்தகைய பொறுப்பற்ற போக்கின் மூலம் மிகப்பெரிய பொதுப் பேசுபொருளாக தவெக மாற்றியமைத்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், ஒரு அரசின் செயலின் மீது பொதுமக்களின் பார்வை மற்றும் கருத்து எவ்வாறு இருக்கும் என்பதை உணர்ந்து செயல்படுவது ஒரு அரசாங்கத்திற்கு மிக மிக முக்கியம் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார். மக்கள் வரிப்பணப் பயன்பாடு மற்றும் மக்கள் கருத்து குறித்த தார்மீகப் பொறுப்பை அரசு உணரணும் என்பதைத் தனது பேச்சில் அவர் வலியுறுத்தியுள்ளார்.
