BREAKING:டிவிஸ்ட்ட மேல் டிவிஸ்ட்..! TVK-வுக்கு செக் வைத்த கம்யூனிஸ்ட் கட்சிகள்.. அதிரடி அறிவிப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

BREAKING:டிவிஸ்ட்ட மேல் டிவிஸ்ட்..! TVK-வுக்கு செக் வைத்த கம்யூனிஸ்ட் கட்சிகள்.. அதிரடி அறிவிப்பு..!!

Published

on

தமிழகத்தில் நடைபெறவுள்ள தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து தனித்துப் போட்டியிடுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுராந்தகம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் , தாராபுரம் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் களம் காணும் என்று தெரிவித்தார். இந்த இரண்டு தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்கள் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது இடதுசாரி கட்சிகள் எந்தவொரு முக்கியக் கூட்டணியிலும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ள இந்த அறிவிப்பு, தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, தங்களுக்கு இடதுசாரிகள் ஆதரவு அளிப்பார்கள் என்று எதிர்பார்த்திருந்த ஆளுங்கட்சியான தமிழக வெற்றி கழகத்திற்கு கம்யூனிஸ்ட் கட்சிகளின் இந்தத் தனித்துப் போட்டி முடிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்த இடைத்தேர்தல் பலமுனைப் போட்டியாக மாறி, களம் சூடுபிடித்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in