“நான் தான் இன்ஜின் ஓட்டுபன்…” என்னை யாரும் இங்கிருந்து நகர்த்த முடியாது…” 1AC பெட்டியில் அரைகுறை ஆடையுடன் ரகளை செய்த நபர்..! வைரல் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“நான் தான் இன்ஜின் ஓட்டுபன்…” என்னை யாரும் இங்கிருந்து நகர்த்த முடியாது…” 1AC பெட்டியில் அரைகுறை ஆடையுடன் ரகளை செய்த நபர்..! வைரல் வீடியோ..!!

Published

on

அமிர்தசரஸிலிருந்து ஜெயநகர் நோக்கிச் சென்ற சல்யூ-யமுனா எக்ஸ்பிரஸ் ரயிலின் H-1 முதல் வகுப்பு ஏசி பெட்டியில், டிக்கெட் இல்லாமல் ஆடையின்றி ஒருவர் படுத்துக் கொண்டிருந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 1AC கூபே பகுதியில் ரயிலின் வெண்டர்களும் அட்டெண்டர்களும் அவரை அங்கிருந்து அகற்ற வந்தபோது, “என்னை இங்கிருந்து அகற்ற யாராலும் முடியாது” என்று கூறி அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும், ரயிலின் ஊழியர் ஒருவர் அவரைத் தள்ள முயன்றபோது, “இந்தியன் ரயில்வே இப்படித்தான் செய்கிறது” எனக் கூறி ரயில்வே ஊழியர்களை நோக்கியும் எட்டி உதைக்கத் தொடங்கியுள்ளார்.

அங்கிருந்த ஊழியர்கள் அவரிடம் தொடர்ந்து கேள்வி எழுப்பியபோது, ஆத்திரமடைந்த அவர் கெட்ட வார்த்தைகளைப் பேசி “நான் இன்ஜின் ஓட்டுபவன்” என்று கூறியுள்ளார். பின்னர் போர்வையைப் போர்த்திக் கொண்டு தலையணைகளுக்குப் பின்னால் தன்னை மறைக்க முயன்றார். ஆடையில்லாமல் இப்படித்தான் சுற்றுவாயா என்று ஊழியர்கள் கேட்டதற்கு, மேலடுக்கில் தனது நண்பர் இருப்பதாகவும், அசோக் என்ற டிடிஇ என்பவரை அழைத்து வருமாறும் கோரிக்கை விடுத்தார். மேலும், ரயில்வே போலீஸ் வந்தால் மட்டுமே தான் அங்கிருந்து தானாக வெளியேறுவேன் என்று கூறி அடம் பிடித்துள்ளார்.

Advertisement

https://www.instagram.com/reel/Dc-8fXFT7__/?utm_source=ig_web_button_share_sheet

இந்த சம்பவம் தொடர்பாக இணையத்தில் பல்வேறு கருத்துகள் எழுந்து வருகின்றன. ஒரு பயணி டிக்கெட் இல்லாமல் இருந்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், ஒருவேளை அவர் உண்மையிலேயே டிக்கெட் எடுத்திருந்து ஊழியர்கள் அவரைத் துன்புறுத்தியிருந்தால் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் மக்கள் வலியுறுத்துகின்றனர். ரயில்வே விதிகளின்படி, லோகோ பைலட்டுகளுக்கு 1AC கூபே ஒதுக்குவது இல்லை; அவர்கள் ஓய்வெடுக்க ரயில் நிலையங்களில் உள்ள ‘ரன்னிங் ரூம்’ வசதிகளையே பயன்படுத்துவார்கள். இந்த சம்பவம் தொடர்பான முழுமையான உண்மைத் தன்மையைக் கண்டறிய ரயில்வே நிர்வாகத்திடம் பதில் கேட்கப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in