காங்கிரஸ் கட்சியில் பெரும் சோகம்.. 64 வயதில் மூத்த தலைவர் சித்திக் அகமது காலமானார்.. அரசியல் உலகில் பேரிழப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

காங்கிரஸ் கட்சியில் பெரும் சோகம்.. 64 வயதில் மூத்த தலைவர் சித்திக் அகமது காலமானார்.. அரசியல் உலகில் பேரிழப்பு..!!

Published

on

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், அசாம் மாநில முன்னாள் அமைச்சருமான சித்திக் அகமது (64) புற்றுநோய் பாதிப்பு காரணமாக இன்று காலமானார். கடந்த நீண்ட காலமாகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்கான தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், பரைகிராமில் உள்ள அவரது இல்லத்தில் அவரது உயிர் பிரிந்தது. அவரது மறைவு செய்தி கேட்டு காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது ஆழந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

மறைந்த சித்திக் அகமது அசாம் மாநில அரசியலில் மிக முக்கிய ஆளுமையாகத் திகழ்ந்தவர் ஆவார். கடந்த 2001-ஆம் ஆண்டு முதன்முறையாக சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அசாம் பேரவைக்குள் நுழைந்த அவர், முன்னாள் முதலமைச்சர் தருண் கோகாய் தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவையில் தொழில்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்துச் சிறப்பான பங்காற்றினார். இவரது மறைவு அசாம் மாநில காங்கிரஸ் கட்சிக்கும், ஒட்டுமொத்த அரசியல் உலகிற்கும் ஒரு பேரிழப்பாகக் கருதப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in