CRIME
அடப்பாவி…! 139 சவரனுக்கு ஆப்பு… 64 பேரை கதறவிட்ட அடகுக்கடை முதலாளி… கடைசியில் ஸ்கெட்ச் போட்டு உரிமையாளரை லாக் செய்த போலீஸ்..!!
தேனி மாவட்டம், வருசநாடு தும்மக்குண்டு பகுதியைச் சேர்ந்த துரைமுருகன் என்பவர் ஆண்டிப்பட்டியில் நகை அடகுக்கடை ஒன்று நடத்தி வந்தார். இவரிடம் ரமேஷ் உள்ளிட்ட 64 வாடிக்கையாளர்கள் தங்களது 139 சவரன் நகைகளை அடகு வைத்திருந்தனர். ஆனால், அடகு வைத்த நகைகளை மீண்டும் திருப்பிக் கொடுக்காமல் மோசடி செய்துவிட்டு, கடையின் உரிமையாளர் துரைமுருகன் தலைமறைவானார்.
பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த அடகுக்கடை உரிமையாளர் துரைமுருகன், அவருடைய தந்தை முருகேசன் மற்றும் கடையில் பணிபுரிந்த ஊழியர் ஸ்ரீமதி ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
முன்னதாக, இந்த வழக்கு தொடர்பாக அடகுக்கடை ஊழியரான ஸ்ரீமதியை காவல்துறையினர் ஏற்கனவே கைது செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து, தலைமறைவாக இருந்த முதன்மை குற்றவாளியான அடகுக்கடை உரிமையாளர் துரைமுருகனை காவல்துறையினர் நேற்றைய தினம் கைது செய்தனர்.
