CRIME
“அம்மா இல்லாத உலகத்துல நான் எதுக்கு..?” தாயின் மரணச் செய்தி கேட்டு 19 வயது மகன் எடுத்த கொடூர முடிவு.. நெஞ்சை நொறுக்கும் துயரம்..!!
தெலங்கானா மாநிலம் மேடக் மாவட்டம் பெத்தசங்கரம்பேட் மண்டலத்தின் மக்தா லட்சுமாபூர் கிராமத்தைச் சேர்ந்த 19 வயது வாலிபர் பிரவீன், தனது தாயின் திடீர் மரணத்தைத் தாங்க முடியாமல் மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட நெஞ்சை உலுக்கும் துயரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. பிரவீனின் தாய் பேட்டம்மா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனது கணவருடன் பிழைப்புத் தேடி ஹைதராபாத் சென்றுள்ளார். அங்கு நேற்று கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கடுமையான குடும்பத் தகராறு காரணமாக, மனமுடைந்த பேட்டம்மா ஹைதராபாத்திலேயே தற்கொலை செய்துகொண்டார்.
தனது தாயின் மரணச் செய்தியைக் கேட்ட வாலிபர் பிரவீன், சொல்லொணாத் துயரத்திலும் ஆழ்ந்த சோகத்திலும் மூழ்கியுள்ளார். தாயை இழந்து வாடிய அவர், கோலாபல்லி கிராமத்தின் ஒதுக்குப்புறப் பகுதியில் உள்ள ஒரு மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். ஒரே குடும்பத்தில் தாயும் மகனும் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்ட இந்த கொடூர விபரீதம் ஒட்டுமொத்தக் கிராமத்தையும் சோகக் கடலில் ஆழ்த்தியுள்ளது.
