“மகளே என்னை மன்னிச்சிடு..!” ஆபீஸ் கதவை உடைத்துப் பார்த்த போலீசாருக்குக் காத்திருந்த அதிர்ச்சி.. மூத்த பத்திரிகையாளருக்கு நேர்ந்த கொடூரம்.. அவர் கைப்பட எழுதிய ‘அந்த’ 5 உருக்கமான கடிதங்கள்..!! – cinefeeds
Connect with us

CRIME

“மகளே என்னை மன்னிச்சிடு..!” ஆபீஸ் கதவை உடைத்துப் பார்த்த போலீசாருக்குக் காத்திருந்த அதிர்ச்சி.. மூத்த பத்திரிகையாளருக்கு நேர்ந்த கொடூரம்.. அவர் கைப்பட எழுதிய ‘அந்த’ 5 உருக்கமான கடிதங்கள்..!!

Published

on

வங்காளதேசத்தின் பாரிசால் பத்திரிகையாளர் மன்றத்தின் முன்னாள் பொதுச்செயலாளரும், ‘தினசரி சமகால்’ நாளிதழின் முன்னாள் பீரோ சீஃபுமான மூத்த பத்திரிகையாளர் புலக் சாட்டர்ஜி (57), அவ்வலுவலகத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த 2023-ஆம் ஆண்டு மே மாதம் ‘சமகால்’ நாளிதழ் நிர்வாகத்தால் அவர் பணியில் இருந்து நீக்கப்பட்டார். வேலை இழந்ததில் இருந்தே அவர் கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்ததாகக் குடும்பத்தினரும் சக ஊழியர்களும் தெரிவித்துள்ளனர். வெள்ளிக்கிழமை மாலை அலுவலகத்தின் கதவு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்த நிலையில், காவல்துறையினர் கதவை உடைத்து அவரது உடலைக் கைப்பற்றினர்.

சம்பவ இடத்திலிருந்து புலக் சாட்டர்ஜி தன் கைப்பட எழுதிய ஐந்து கடிதங்களை காவல்துறையினர் மீட்டுள்ளனர். அதில், நீண்ட கால உடல்நலக் குறைவு, வேலையின்மை மற்றும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாகத் தான் தற்கொலை செய்துகொள்வதாகவும், தனது மகளிடம் தன்னை மன்னித்துவிடுமாறும் அவர் உருக்கமாக எழுதியுள்ளார். அவர் இந்தியாவின் வேலூர் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. காவல்துறையினர் தற்பொழுது இச்சம்பவத்தைத் தற்கொலை வழக்காகப் பதிவு செய்து, உடலைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in