“அய்யோ கடவுளே.. நேருக்கு நேர் மோதிய பைக்..” தூக்கி வீசப்பட்ட 4 வாலிபர்களுக்கு நேர்ந்த விபரீதம்.. நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“அய்யோ கடவுளே.. நேருக்கு நேர் மோதிய பைக்..” தூக்கி வீசப்பட்ட 4 வாலிபர்களுக்கு நேர்ந்த விபரீதம்.. நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்..!!

Published

on

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சாலையில் உள்ள ஏடிஎம் சிட்டி பகுதியில், இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் நான்கு இளைஞர்கள் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். ஆசிக் என்ற இளைஞர் தனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது எதிர்பாராதவிதமாக சாலையைக் கடக்க முயன்றுள்ளார். அப்போது அந்த வழியே அதிவேகமாக வந்த மற்றொரு இருசக்கர வாகனம் ஆசிக்கின் வாகனத்தின் மீது மிகக் கொடூரமாக மோதியது.

இந்த பயங்கர விபத்தில் ஆசிக் மற்றும் மற்றொரு வாகனத்தில் பயணித்த அன்புச்செல்வன், கார்த்தி, தீபேஸ் ஆகிய 4 இளைஞர்களும் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். விபத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்த பொதுமக்கள், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக உடனடியாக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள ராசிபுரம் காவல்துறையினர், விபத்துக்கான காரணம் அதிவேகமா அல்லது கவனக்குறைவா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in