LATEST NEWS
“டார்லிங்… உனக்காக நிலாவையே தருவேன்..! ரூ.23 ஆயிரத்திற்கு நிலவில் 1 ஏக்கர் நிலம்…! வருங்கால மனைவிக்கு பிரம்மாண்ட சர்ப்ரைஸ் கொடுத்த நாமக்கல் இன்ஜினியர்..!!”
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டையைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான அசோக் சரவணன் என்பவருக்கும், மதுரையைச் சேர்ந்த ராதிகா என்பவருக்கும் வரும் 17-ஆம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், தனது வருங்கால மனைவிக்காக ஒரு சிறப்புப் பரிசை அளிக்கத் திட்டமிட்ட அசோக் சரவணன், நிலவில் நிலம் வாங்கி அவரைக் ஆச்சரியப்படுத்த முடிவு செய்தார்.
இதற்காக சுவிட்சர்லாந்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு நிலவில் நிலம் வாங்க விண்ணப்பித்த அவர், ஒரு ஏக்கர் நிலத்திற்கு ரூ.23,000 கட்டணமாகச் செலுத்தியுள்ளார். அதன்பின்னர், நிலவில் நிலம் வாங்கியதற்கான உரிய ஆவணங்களையும் அந்தத் தனியார் நிறுவனத்திடமிருந்து அவர் வெற்றிகரமாகப் பெற்றுள்ளார்.
இருப்பினும், 1967-ஆம் ஆண்டின் சர்வதேச விண்வெளி ஒப்பந்தத்தின்படி, நிலவில் எந்தவொரு தனிநபரோ அல்லது நாடுகளோ சொந்தமாக நிலம் வாங்கவோ அல்லது உரிமை கொண்டாடவோ முடியாது. எனவே, இதுபோன்ற வணிக நிறுவனங்கள் வழங்கும் சான்றிதழ்கள் அன்பானவர்களுக்கு ஒரு வித்தியாசமான பரிசைக் கொடுத்து மகிழ்வதற்கான ‘நினைவுச் சான்றிதழாக’ (அன்பளிப்பு ஆவணமாக) மட்டுமே கருதப்படுமே தவிர, இதற்கு எவ்வித சட்டப்பூர்வ அதிகாரமும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
