CRIME
ச்சீ மனுஷனா நீ..? “லேப்டாப்பில் இருந்த அந்த போட்டோ” சகோதரிகளை AI மூலம் ஆபாசமாக மாற்றிய கணவன்.. பார்த்ததும் அதிர்ச்சியில் உறைந்த மனைவி… மனசாட்சியற்ற கொடூரம்..!!
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்த இளங்கோவன் (35) என்பவர், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தனது மனைவியின் அக்காள் மற்றும் தங்கையின் புகைப்படங்களை ஆபாசமாகச் சித்தரித்த குற்றத்திற்காக அனைத்து மகளிர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆந்திர மாநிலம் நெல்லூரில் உள்ள மின் உற்பத்தி நிலையத்தில் (Power plant) பணியாற்றி வரும் இவர், தனது மனைவியுடன் குமாரபாளையத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்.
கடந்த 30ஆம் தேதி இரவு, இளங்கோவனின் மனைவி மேனகா கல்லூரிக்குச் செல்வதற்காகத் தன் லேப்டாப்பைத் திறந்து பார்த்தபோது, அதில் தனது சகோதரிகளின் முகங்கள் நிர்வாண உடல்களுடன் இணைக்கப்பட்டு ஆபாசமாக மாற்றப்பட்டிருந்த படங்களைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, ஆபாசப் படங்கள் பார்க்கும் பழக்கம் கொண்ட இளங்கோவன், AI தொழில்நுட்பம் மூலம் அந்தப் படங்களை உருவாக்கியதை ஒப்புக்கொண்டுள்ளார்.
இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான மேனகா, தனது குடும்பத்தினரிடம் விபரத்தைக் கூறிவிட்டு திருச்செங்கோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் தகவல் தொழில்நுட்பச் சட்டம் (IT Act) பிரிவு 67 மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) பிரிவு 79 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், இளங்கோவனைக் கைது செய்து அவரிடமிருந்த லேப்டாப்கள் மற்றும் செல்போன்களைப் பறிமுதல் செய்துள்ளனர்.
