LATEST NEWS
குடும்பத் தலைவிகளுக்கு குட் நியூஸ்..! பொங்கலுக்கு முன்பே வருகிறது பணம்… ‘அன்னபூரணி சூப்பர் சிக்ஸ்’ திட்டத்தில் அரசின் மாஸ் திட்டம்..!!
‘அன்னபூரணி சூப்பர் சிக்ஸ்’ திட்டத்தின்படி இலவச கேஸ் சிலிண்டர் பெறும் தகுதியுள்ள பயனாளிகளின் விபரங்களைச் சேகரிக்கும் பணிகளைத் தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம், ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பப் பெண்களுக்குச் சமையல் எரிவாயுவை எளிதாகக் கிடைக்கச் செய்து, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதாகும்.
இத்திட்டத்தின் கீழ், பொங்கல், தமிழ் புத்தாண்டு மற்றும் தீபாவளி ஆகிய மூன்று முக்கிய பண்டிகைகளை முன்னிட்டு, ஆண்டுக்கு மொத்தம் 3 இலவச சிலிண்டர்களுக்கான தொகை பயனாளிகளுக்கு வழங்கப்பட உள்ளது. இதற்கான பணப் பலன்கள் நேரடியாகப் பயனாளிகளின் வங்கித் கணக்குகளுக்கே மாற்றப்படும் என்பதால், இடைத்தரகர்கள் இன்றி முழுத் தொகையும் மக்களைச் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரும் 2027ஆம் ஆண்டில் இத்திட்டத்தை முழுமையாகத் தொடங்கும் வகையில் அரசு தீவிர ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. முதற்கட்டமாக, 2027 பொங்கல் திருநாளுக்கு முன்பாகவே சிலிண்டருக்கான தொகையைத் தகுதியான பயனாளிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்க அதிகாரிகள் திட்டமிட்டு, அதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
