LATEST NEWS
BREAKING: குழந்தைகள் தினத்தில் பள்ளி மாணவர்களுக்கு கேக்.. காலையிலேயே தமிழக அரசு இன்பச்செய்தி..!!
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கேக் துண்டுகள் வழங்குவதற்காக தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், ரூ.9.27 கோடி மதிப்பீட்டில் மொத்தம் 61.84 லட்சம் கேக் துண்டுகள் மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விநியோகத்திற்காக அரசு ஒரு முக்கிய நிபந்தனையையும் விதித்துள்ளது. அதன்படி, கேக்குகள் பள்ளிகளில் பெறப்படும் போது, அவை கெட்டுப்போகாமல் இருப்பதற்கான மொத்த காலாவதி காலத்தில் (Expiry date) குறைந்தது 30 நாட்கள் மீதமிருக்க வேண்டும் எனத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
