LATEST NEWS
“All is well.. Confident-ஆ இருங்க..” குழந்தைகளுக்கு கேக் ஊட்டி.. அன்பான வாழ்த்து அட்டை வழங்கிய முதல்-அமைச்சர் விஜய்..!!
சென்னை கொளத்தூரில் உள்ள அரசுப்பள்ளியில் குழந்தைகள் தினத்தையொட்டி குழந்தைகளுக்கு கேக் மற்றும் வாழ்த்து அட்டையை முதல்-அமைச்சர் விஜய் வழங்கினார். நாடு முழுவதும் நாளை (சனிக்கிழமை) குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், இந்த ஆண்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவ மாணவிகளுக்கு கேக் வழங்க தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக ரூ.9.27 கோடியில் டெண்டர் விடப்பட்டு, 45 கிராம் எடை கொண்ட கேக்குகள் கொள்முதல் செய்யப்பட்டன.
இதன்படி கொளத்தூர் அரசு நடுநிலைப் பள்ளியில் இன்று காலை இந்த திட்டத்தை தொடங்கி வைத்து, மாணவ-மாணவிகளுக்கு முதல்-அமைச்சர் விஜய் கேக் மற்றும் குழந்தைகள் தின வாழ்த்து அட்டைகளை வழங்கினார். மேலும் அவர்களுடன் அவர் கலந்துரையாடினார். கொளத்தூரில் தொடங்கி வைக்கப்படும் அதே நேரத்தில் தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு மொத்தம் 61 லட்சத்து 84 ஆயிரத்து 566 கேக் துண்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன. சென்னை மாநகராட்சி பகுதிகளில் மட்டும் 2.90 லட்சம் மாணவர்களுக்கு கேக் மற்றும் வாழ்த்து அட்டை வழங்கப்பட்டு வருகிறது.
பள்ளி சிறார்களுக்கு வழங்கிய வாழ்த்து அட்டையில், இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள் என்றும், “All is well” என்றும், “Confident-ஆ இருங்க” என்றும், பிரியமுடன் விஜய் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. முதல்-அமைச்சர் விஜய் வருகையையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
