LATEST NEWS
“இத குடிச்சுட்டு நாங்க செத்துப் போவதா..?!” ரூ.300 கொடுத்து வாங்கிய மதுபாட்டிலில் மிதந்த அந்த ஒரு விஷயம்.. கொந்தளித்த மதுப்பிரியர்கள்..!!
நாமக்கல் மாவட்டம் அத்தனூர் அருகே அமைந்துள்ள மதுக்கடையில் நேற்று இரவு இரண்டு நபர்கள் மது வாங்குவதற்காகச் சென்றுள்ளனர். அப்போது அவர்கள் வாங்கிய மதுபாட்டிலைத் திறந்து குடிக்க முற்பட்ட வேளையில், அதற்குள் தூசி மற்றும் குப்பைகள் மிதப்பதைக் கண்டு பெரும் அதிர்ச்சியடைந்தனர்.
பாதிக்கப்பட்ட நபர்கள் ரூ.300 செலுத்தி 2 மதுபாட்டில்களை வாங்கியுள்ளனர். அதில் ஒரு பாட்டிலை இருவரும் குடித்து முடித்த நிலையில், அடுத்த பாட்டிலைத் திறந்தபோதுதான் இந்த மாசடைந்த குப்பைகள் இருந்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, அங்கிருந்த செய்தியாளர்களின் முன்னிலையில் குப்பை நிறைந்த அந்த மதுபாட்டிலைக் காண்பித்து மதுப்பிரியர்கள் குற்றம்சாட்டினர். “பணம் கொடுத்து வாங்கும் மதுவில் இதுபோன்று குப்பைகள் இருந்தால், இதைக் குடித்துவிட்டு நாங்கள் செத்துப் போவதா, இதற்கு உரிய தீர்வு மற்றும் நடவடிக்கை தேவை” என்று அவர்கள் ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பியுள்ளனர்.
